Rohit Sharma: ரோஹித்துக்கு பதில் ஏன் ஹர்திக் பாண்டியா... மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பளீச்!
Mumbai Indians Coach on Rohit Sharma Captaincy: வரும் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்னடாக்கியது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
Hardik Pandya, Mumbai Indians Coach on Rohit Sharma Captaincy: ஐபிஎல் தொடர் (IPL 2024) தொடங்குவதற்கு முன்பே, அதன் மீதான பரபரப்பு அதிகமாக உள்ளது எனலாம். ஐபிஎல் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு முன்பு, ஒவ்வொரு அணியும் வரும் சீசனில் எந்த வீரரை தக்கவைக்கிறது மற்றும் எந்த வீரரை விடுவிக்கிறது என்பதை வெளியிட்டது. மேலும், பல வீரர்கள் அணிகளுக்கு இடையே டிரேடிங்கும் செய்யப்பட்டனர்.
இதில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டிரேட் என்றால், அது குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்கு திரும்பியதுதான். இந்த டிரேடிங்கில், எந்த வீரரையும் குஜராத் அணி நிர்வாகம் பதிலுக்கு மும்பையிடம் இருந்து பெறவில்லை. தொடர் விதிமுறைப்படியிலான ரொக்கத்தை மட்டும் கொடுத்து ஹர்திக் பாண்டியாவை (Hardik Pandya) மும்பை அணி நிர்வாகம் மீண்டும் பெற்றது.
மார்க் பவுச்சர் கருத்து
மேலும், இதுவே பலருக்கும் அதிர்ச்சியாக இருந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் வருகையினால் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸிக்கும் (Rohit Sharma Captaincy) பிரச்னை வரலாம் என முன்னரே ஆருடம் கூறப்பட்டது. அதனை மெய்யாக்கும் வகையில், வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்தது.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவின் தற்போதைய நிலை என்ன? வெளியான வீடியோ!
இதன்மீது, ரோஹித் சர்மா தரப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட மும்பை அணி வீரர்களிடமே சில முணுமுணுப்புகளை கேட்க முடிகிறது. இந்திய அணியின் மூத்த வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் இதுகுறித்து பல கருத்துகளை வைத்துள்ளனர். அந்த வகையில், ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியின் கேப்டனாக்கிய அந்த முடிவு குறித்து, அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் (Mark Boucher) கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது, ஒரு விளையாட்டு சார்ந்த பாட்காஸ்ட் சீரிஸில் பேசிய மார்க் பவுச்சர்,"மும்பை இந்தியன்ஸ் கேபிடன்ஸி மாற்றம் என்பது முற்றிலும் கிரிக்கெட் சார்ந்த முடிவு என்று நினைக்கிறேன். ஹர்திக் பாண்டியாவை மீண்டும் வீரராகப் பெறுவதற்கான வாய்ப்பை அதில் பார்த்தோம்.
உணர்ச்சிவசப்படாதீர்கள்...
என்னைப் பொறுத்தவரை, மும்பை இந்தியனஸ் அணியில் இது மாற்றத்திற்கான காலகட்டம் எனலாம். இந்தியாவில் நிறைய பேருக்கு இது புரியவில்லை, மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள் எனலாம். ஆனால் நீங்கள் உணர்ச்சிகளை இதுபோன்ற விஷயத்தில் இருந்து விலக்கிக்கொண்டு பார்க்க வேண்டும்.
இது ஒரு கிரிக்கெட் விளையாட்டு சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு என்று நான் நினைக்கிறேன், மேலும் இது ஒரு வீரராக ரோஹித்திடம் இருந்து சிறந்த விளையாட்டை இன்னும் வெளிக்கொண்டுவரும் என்று நான் நினைக்கிறேன். அவர் கேப்டனாக இல்லாமல், அழுத்தம் ஏதும் இன்றி பேட்டராக ரசனையுடன் ரன்களை குவிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்" என பேசியிருந்தார்.
ரோஹித் மனைவியின் பதில்
மார்க் பவுச்சர் பேசிய இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டது. அந்த பதிவின் கீழ் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே (Rohit Sharma's Wife Ritika Sajdeh), "இதில் பல தவறுகள் உள்ளன" என்று கமெண்ட் செய்திருந்தது தற்போது புயலை கிளப்பி உள்ளது. குறப்பாக ரோஹித் சர்மா 2013ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரை கேப்டனாக இருந்தபோது, 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
மேலும், பல ஆண்டுகளாக வெற்றிகரமான அணியாகவும், புதிய புதிய திறமைகளை அடையாளம் காணும் இடமாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்து வந்துள்ளது. அத்தகைய கண்டுபிடிப்புகளில் ஒருவர்தான் ஹர்திக் பாண்டியா. இவர் வருகைக்கு பின், அதாவது 2015ஆம் ஆண்டுக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை வென்றுள்ளது. இந்த நான்கு முறை கோப்பை வெல்லவும் ஹர்திக் பாண்டியாவின் பங்கும் அதிகம் இருந்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது.
புது ரத்தம்...
2020ஆம் ஆண்டுதான் மும்பை அணி கடைசியாக கோப்பை வென்றது. அதன்பின், மூன்று சீசன்களும் சற்று மோசமாகவே இருந்தது. குறிப்பாக, கடந்த இரண்டு சீசன்கள் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக இருந்து, 2022ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் வென்றார். கடந்தாண்டு இறுதிப்போட்டி வரை வந்து சிஎஸ்கேவிடம் குஜராத் தோல்வி அடைந்தது. இதன்மூலம், கேப்டனாகவும், ஹர்திக் ஜொலித்துள்ளார்.
எனவே, புது ரத்தம் பாய்ச்சவே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்ஸி மாற்றப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும், அணியில் ரோஹித் சர்மாவின் தேவையும் உள்ளது. அதுகுறித்தும் மார்க் பவுச்சர் அந்த பாட்காஸ்டில் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | 100 கோடி ரூபாய் கொட்டி கொடுத்து ஹர்திக்கை தூக்கிய மும்பை
ரோஹித் உடன் இருந்து நான் புரிந்துகொண்டது, அவர் ஒரு அற்புதமான மனிதர். அவர் பல ஆண்டுகளாக மும்பை அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் அவர் சிறப்பாக விளையாடி உள்ளார். இப்போது அவர் இந்திய அணிக்கும் கேப்டனாக உள்ளார்.
சிறப்பான வாய்ப்பு...
தற்போது அவர் ஒரு இடத்திற்குச் செல்கிறார் என்றால் அங்கு கேமராக்கள் மட்டுமே உள்ளன, அவர் மிகவும் பிஸியாக காணப்படுகிறார். மேலும், கடந்த இரண்டு சீசன்களிலும் அவர் பேட்டிங்கில் பெரிதாக ரன்களை சேர்க்கவில்லை. ஆனால் அவர் ஒரு கேப்டனாக சிறப்பாகச் செயல்படுகிறார்.
நாங்கள் முழு மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து பேசும்போது உங்களுக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். ஒரு வீரராக அணியில் இருக்கும் இன்னும் சிறப்பாக செயல்பட இதுவே அவருக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என நினைத்தோம்.
கேப்டனாக இருக்க வேண்டும் என்ற அழுத்தம் இல்லாமல் களத்திற்கு சென்று ரசித்து ரசித்து பெரியளவில் ரன்களை அடிக்க இதுவே சிறந்த தருணம். அவர் இந்திய அணிக்கு கேப்டனாகதான் இருக்கப் போகிறார், அதனால் சர்று பரபரப்பு இருக்கும். ஆனால் அவர் ஐபிஎல்லில் அடியெடுத்து வைக்கும் போது, ஒரு கேப்டனாக அவருக்கு அந்த கூடுதல் அழுத்தமும் இருக்கும். தற்போது இந்த முடிவு ரோஹித் சர்மாவுக்கு சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர ஒரு வாய்ப்பை கொடுக்கலாம்" என்றார். ஹர்திக் பாண்டியா (Hardik Pandya Injury) தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளில் சதம் அடிக்காத நட்சத்திர வீரர்கள் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!