SRH vs RCB Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது பரபரப்பான சூழலில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பு தொடரின் 40வது லீக் போட்டியில் அசுர பலம் கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, கடைசி இடத்தில் தத்தளிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொண்டது 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன்  டூ பிளெசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த சில போட்டிகளாக ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கும் மேல் குவித்து பிரமிக்க வைத்த நிலையில், ஆர்சிபி முதலில் பேட்டிங் என்ற முடிவை எடுத்தது. 


கலக்கிய ரஜத் பட்டிதார்


அதன்படி, ஆரம்பத்தில் இருந்தே ஆர்சிபி அதிரடியாக விளையாடினாலும் 25(12) ரன்களுடனும், வில் ஜோக்ஸ் 6 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். பவர்பிளே முடிவில் ஆர்சிபி 2 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை எடுத்தது. விராட் கோலி நிதானமாக விளையாடி அரைசதம் நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில், ரஜத் பட்டிதார் மார்க்கண்டே ஓவரில் 4 சிக்ஸர்களை தொடர்ந்து பறக்கவிட்டு ஆட்டத்தில் ஆர்சிபியை முன்னணி பெறவைத்தார். 19 பந்துகளில் அவர் அரைசதம் அடித்த நிலையில், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அதில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகல் அடக்கம். 


மேலும் படிக்க | CSK: சிஎஸ்கேவின் பேட்டிங்கில் இந்த வீரரை நீக்கினால் போதும்... வெற்றி மேல் வெற்றி வரும்!
 
கைக்கொடுத்த கேம்ரூன் கிரீன்


அவர் அவுட்டான சில பந்துகளிலேயே விராட் கோலியும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கிரீன் மட்டுமே நிலைத்து நின்று விளையாடி 20 பந்துகளில் 5 பவுண்டரிகள் உடன் 37 ரன்களை அடித்தார். இதனால், 20 ஓவர்களில் ஆர்சிபி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை ஆர்சிபி எடுத்தது. ஹைதராபாத் பந்துவீச்சில் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர். இரண்டு இடதுகை பேட்டர்கள் இருந்ததால், ஆப் ஸ்பின்னரான வில் ஜாக்ஸை ஆர்சிபி பயன்படுத்தியது. குறிப்பக, வில் ஜாக்ஸ் ஸ்டம்ப் லைனிலேயே பந்துவீசி அந்த ஓவரிலேயே ஹெட்டின் விக்கெட்டை கைப்பற்றினார். 


ரஜத் பட்டிதார் ஆட்ட நாயகன்


அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி வந்தாலும் அவர் யாஷ் தயாள் வீசிய 4வது ஓவரில் ஆட்டமிழக்க சன்ரைசர்ஸ் சற்று திணற தொடங்கியது. அதற்கடுத்த ஓவரை ஸ்வப்னில் சிங் வீச அதில் மார்க்ரம் மற்றும் கிளாசென் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றம் அளித்தனர். தொடர்ந்து கேப்டன் கம்மின்ஸ் சில அதிரடி ஷாட்களை ஆடி ஆட்டமிழந்தாலும் கடைசி வரை நின்று ஷாபாஸ் அகமது ஆறுதல் அளித்தார். இதன்மூலம் ஹைதராபத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுளை இழந்து 171 ரன்களையே பெற்றது. ஸ்வப்னில் சிங், கரன் சர்மா, கேம்ரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷாபாஸ் 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 19 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்த ரஜத் பட்டிதார் ஆட்ட நாயகனாக தேர்வானார். 



ஆர்சிபியின் வியூகங்கள்


ஆர்சிபி அணி இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசியது. குறிப்பாக, இடது கை ஓப்பனர்களுக்கு ஆப் ஸ்பின்னரை கொண்டு வந்து விக்கெட் எடுத்தது. வில் ஜாக்ஸ் ஓவரை அபிஷேக் அடித்ததும், யாஷ் தயாளை அழைத்து ஸ்லோ பவுண்சரை போட செய்தது. மார்க்ரம் வந்த உடன் இடது பேட்டர், கம்மின்ஸ் ஸ்பின்னர்களை அடிக்கிறார் என தெரிந்ததும் பேஸ் அட்டாக் செய்தது என ஆர்சிபி இன்று வகுத்த அனைத்து வியூகங்களும் அவர்களுக்கு கைக்கொடுத்துள்ளது. 


மேலும் படிக்க |  இந்த அணிகள் தான் பிளே ஆப் செல்லும்... அதில் சிஎஸ்கே இருக்கா...? கணிப்பும் காரணமும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ