IND vs SL: இந்திய அணி அறிவிப்பு... கேப்டன்ஸியில் ட்விஸ்ட் - யார் யாருக்கு வாய்ப்பு?
IND vs SL, Team India Squad Announced: இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
IND vs SL, Team India Squad Announced: இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களை விளையாட இருக்கிறது. மூன்று டி20 போட்டிகள் முறையே ஜூலை 27, 28, 30 ஆகிய மூன்று நாள்களில் நடைபெறுகிறது. மூன்று ஓடிஐ போட்டிகள் முறையே ஆக. 2, 4, 7 ஆகிய மூன்று நாள்களில் நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பை தொடரோடு தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, கௌதம் கம்பீரை புதிய தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ அறிவித்தது. கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை இந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து தொடங்குகிறார். அந்த வகையில், டி20 மற்றும் ஐடிஐ தொடர்களான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பளிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
கேப்டன்ஸியில் ட்விஸ்ட்
இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அந்த வகையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிலும் ஹர்திக் பாண்டியா டி20 ஸ்குவாடில் இடம்பெற்றிருந்தாலும் கேப்டன்ஸி பொறுப்பு சூர்யகுமார் யாதவிடமே கொடுக்கப்பட்டுள்ளது, இதில் கம்பீரின் தலையீட்டை உறுதிசெய்துள்ளது எனலாம். அதாவது, கேப்டன்ஸி பொறுப்பில் இருப்பவர்கள் வேலைப்பளூ மற்றும் காயம் சார்ந்த பிரச்னைகள் இல்லாதவர்களாக இருப்பது எதிர்காலத்திற்கு நல்லது என பிசிசிஐ தேர்வுக்குழுவிடம் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
டி20இல் யார் யாருக்கு வாய்ப்பு?
அதன்படி, ஹர்திக் பாண்டியாவுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் என்ற நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவிற்கு பிசிசிஐ தேர்வுக்குழு வாய்ப்பளித்திருப்பதாக தெரிகிறது. மேலும், டி20 அணியில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெறவில்லை. ஓப்பனிங்கில் கில் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்குவார்கள்.
மிடில் ஆர்டருக்கு சூர்யகுமார், ரின்கு சிங், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், அக்சர் ஆகியோர் கைக்கொடுப்பார்கள். இதனால் எட்டாவது வீரர் வரை பேட்டிங் ஆப்ஷன் இருக்கும். இந்த எட்டு பேரிலேயே அக்சர், ஹர்திக் என இரண்டு பௌலிங் ஆப்ஷனும் கிடைக்கிறது. வேகப்பந்துவீச்சில் கலீல் அகமது, அர்ஷ்தீப் சிங், சிராஜ் உள்ளிட்டோர் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் உள்ளனர். மேலும், விக்கெட் கீப்பர் பேக்அப் ஆக சஞ்சு சாம்சன், ஆல்-ரவுண்டர்கள் பேக்அப் ஆக தூபே, வாஷிங்டன் உள்ளனர்.
ஓடிஐயில் யார் யாருக்கு வாய்ப்பு?
எதிர்பார்த்ததை போல், ரோஹித் சர்மா ஓடிஐ தொடரில் கேப்டனாக தொடர்கிறார். மறுபுறம் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. டி20 அணியில் இடம்பெற்ற ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு ஓடிஐ தொடரில் இடம் அளிக்கப்படவில்லை. இவர்களை டி20இல் மட்டும் இப்போதைக்கு பயன்படுத்த தேர்வுக்குழு திட்டமிட்டிருக்கலாம். சுப்மான் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பதும் ஆச்சர்யமளிக்கிறது. விராட் கோலி ஓடிஐ அணியில் இடம்பிடித்துள்ளார்.
அதேபோல், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பி உள்ளார். சிவம் தூபே, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஓடிஐ அணியில் புதிதாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அக்சர் படேல் மீண்டும் ஓடிஐ அணிக்கு திரும்பி உள்ளார். வேகப்பந்துவீச்சில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு இதில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் ஸ்பின்னராக குல்தீப் இருக்கிறார். பும்ரா டி20 மற்றும் ஓடிஐ ஆகிய இரு அணிகளிலும் இடம்பெறவில்லை.
கழட்டிவிடப்பட்ட முக்கிய வீரர்கள்
கடந்த 2023 ஓடிஐ உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மற்ற வீரர்களான இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், ஷர்துல் தாகூர் ஆகியோர் இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து முழுவதுமாக கழட்டிவிடப்பட்டுள்ளனர். ஷமி காயத்தில் இருந்து மீண்டுவிட்டாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அஸ்வின், ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோரை அடுத்தடுத்து நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் பயன்படுத்த இந்திய தேர்வுக்குழு முடிவெடுத்திருக்கலாம்.
டி20 ஸ்குவாட்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மான் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்
ஓடிஐ ஸ்குவாட்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மான் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ