Royal Challengers Bangalore, Ee Sala Cup Namdhu: ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தல், பயங்கரவாத மிரட்டல்கள், பல சுற்றுச்சூழல் பிரச்னைகள், கொரோனா காலகட்டம் என பல கடினமான சூழல்களிலும் வருடாவருடம் ஐபிஎல் தொடர் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்றுவிடும். 2020இல் மட்டுமே கரோனா காலத்தால் சில மாதங்கள் தள்ளிவைக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தளவிற்கு ஐபிஎல் தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 16 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் தற்போது 10 அணிகள் விளையாடும் நிலையில், WPL தொடரில் ஐந்து அணிகள் விளையாடின.


வீடியோ காலில் வந்த விராட் கோலி


மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெய்ன்ட்ஸ், UP வாரியர்ஸ் என ஐந்து அணிகள் WPL தொடரில் பங்கேற்றன. கடந்தாண்டு மும்பை அணி கோப்பையை வென்ற நிலையில், இந்தாண்டு ஆர்சிபி கோப்பையை வென்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல்முறையாக IPL, WPL வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளது.



மேலும் படிக்க | WPL 2024 Final: சாம்பியன் பட்டத்தை வென்றது ஆர்சிபி - இறுதியில் நிறைவேறிய ஈ சாலா கப் கனவு!


இன்று நடைபெற்ற WPL தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வென்று ஆர்சிபி இந்த கோப்பையை கைப்பற்றியது. ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டரி, விராட் கோலி, வாட்சன், ஃபாஃப் டூ பிளேசிஸ் உள்ளிட்ட பலரும் ஆர்சிபிக்கு கேப்டனாக இருந்திருந்தாலும் ஸ்மிருதி மந்தனாவே முதல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார் எனலாம். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற உடனேயே ஆர்சிபி ஆடவர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வீடியோ காலில் வந்து, மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். 



தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் என ஆர்சிபி வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வெற்றி பெற்ற மகளிர் ஆர்சிபி அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பிரபல தொழிலதிபரும், ஆர்சிபியின் முன்னாள் உரிமையாளருமான விஜய் மல்லய்யா மகளிர் அணி வெற்றி பெற்றதற்கு ட்வீட் செய்துள்ளார். அதில்,"WPL தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மகளிர் ஆர்சிபி அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீண்ட காலமாக தவம் கிடக்கும் ஆர்சிபி ஆடவர் இந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்றால் அது அற்புதமான இரட்டை விருந்தாக இருக்கும்" என பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. 



முக்கியமாக, இன்று சாம்பியன் பட்டம் வென்று ஆறு கோடி பரிசுத்தொகையை பெற்ற பின்னர் ஆர்சிபி மகளிர் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேசுகையில்,"ரசிகர்களுக்கு மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவு அளித்து வந்ததற்கு... எப்போது ஆர்சிபி அணியை நோக்கி 'ஈ சாலா கப் நம்தே' (Ee Sala Cup Namdhe) என்ற கோஷம் எழுப்பப்படும். இனி அது 'ஈ சாலா கப் நம்து' (Ee Sala Cup Namdhu)" என்றார். தொடர்ந்து ஆர்சிபி கோப்பையை பெற்றதை அடுத்து, அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 


மேலும் படிக்க | IPL 2024: இந்த முறையாவது ஆர்சிபிக்கு கப்பு கிடைக்குமா? பலம், பலவீனம் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ