PBKS vs CSK Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 53வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தரம்சாலா மைதானத்தில் மோதின. இந்த போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட் டாஸை கோட்டைவிட்டார். டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணிக்கு சுமாரான தொடக்கமே கிடைத்தது. ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழக்க, ருதுராஜ் - மிட்செல் சேர்ந்து பவர்பிளேவில் ரன்களை குவிக்க 6 ஓவர்களில் 1 விக்கெட்டுகள் இழப்பிற்கு சிஎஸ்கே 60 ரன்களை குவித்தது. ஆனால் பவர்பிளேவுக்கு பின்னர்தான் சிஎஸ்கேவுக்கு பிரச்னையே தொடங்கியது. 


தோனி டக்அவுட்


ருதுராஜ் 32, தூபே 0, மிட்செல் 30, மொயின் 17 என தொடர்ந்து விக்கெட்டுகளை கொடுத்தனர். ஜடேஜா - சான்ட்னர் உடன் சிறிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். 15வது ஓவருக்கு பின் சான்ட்னர் 11, ஷர்துல் தாக்கூர் 17, தோனி 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 19வது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் தோனியின் விக்கெட்டை ஸ்லோ யார்க்கர் போட்டு அசத்தலாக எடுத்தார். கடைசி ஓவரில் ஜடேஜாவும் சில பவுண்டரிகளை அடித்து ஆட்டமிழந்தார்.


மேலும் படிக்க | இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா?


இதன்மூலம், சிஎஸ்கே 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது. ராகுல் சஹார், ஹர்ஷல் பட்டேல் தலா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாம் கரன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 168 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. சான்ட்னர் முதல் ஓவரை வீசி 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். 



சீறும் சிஎஸ்கே


2வது ஓவரை தேஷ்பாண்டே அசத்தலாக வீசி பேர்ஸ்டோவ் மற்றும் ரூசோவை ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து பவர்பிளேவில் அருமையாக வீசி 6 ஓவர்களுக்கு 46 ரன்களை மட்டுமே சிஎஸ்கே கொடுத்தது. அதன்பின் ஆட்டம் சிஎஸ்கே பக்கம் திரும்பியது. ஷஷாங்க் 27, பிரப்சிம்ரன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 


தொடர்ந்து, விக்கெட்டுகள் சரிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 139 ரன்களையே எடுத்தது. இதன்மூலம், சிஎஸ்கே அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், தேஷ்பாண்டே மற்றும் சிமர்ஜித் சிங் தலா 2 விக்கெட்டுகளையும், சான்ட்னர் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். 


புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணி +0.700 ரன்ரேட்டுடன் 3வது இடத்திற்கு முன்னேறியது. பஞ்சாப் கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் தொடர்கிறது. இன்னும் 3 போட்டிகளில் சிஎஸ்கே அணி வென்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பு உறுதியாகும். மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாகவே தொடரில் இருந்து வெளியேறியது.


மேலும் படிக்க | தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ