சொதப்பிய மும்பை... சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளிய டெல்லி - பரிதாப நிலையில் பௌலர்கள்!
DC vs MI Highlights: மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.
DC vs MI Highlights: நடப்பு ஐபிஎல் தொடர் என்பது சாதாரணமாக 200 ரன்கள் குவிக்கப்படும் வீடியோ கேம் கிரிக்கெட்டாக மாறிவிட்டது என்பது பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது. பந்துவீச்சாளர்களுக்கு எவ்வித சாதகமும் இன்றி பேட்டர்களுக்கு வாணவேடிக்கை காட்டுவதற்கு மட்டும் ஆடுகளம் அமைக்கப்படுகிறது என தொடர்ந்து பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.
நடப்பு தொடரில் பல போட்டிகளில் 200 ரன்களுக்கும் மேல் அடிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும். சன்ரைசர்ஸ், கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, மும்பை, பஞ்சாப் ஆகிய அணிகள் இம்பாக்ட் பிளேயர் விதியை வைத்துக்கொண்டு ரன்களை குவித்து வருகின்றனர். நேற்றைய கொல்கத்தா - பஞ்சாப் போட்டியில் 262 ரன்கள் இலக்கை பஞ்சாப் அசால்ட்டாக 8 பந்துகளை மிச்சம் வைத்து அடித்தது. இது பந்துவீச்சாளர்களின் நிலையை மிகவும் கேள்விக்குள்ளாக்கியது.
504 ரன்கள் குவிப்பு
அதே விதமான போட்டிதான் இன்றும் நடந்தது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 257 ரன்களை அடித்த நிலையில், மும்பை அணி சேஸிங்கில் 247 ரன்களை அடித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது, இந்த போட்டியில் மொத்தம் 504 ரன்கள் குவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | CSK: சிஎஸ்கே டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்...? ஹைதராபாத்தை வீழ்த்த மெகா பிளான்
டெல்லி அணி தனது இன்னிங்ஸில் 17 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகள் அடித்தது. மும்பை அணி தனது இன்னிங்ஸில் 15 சிக்ஸர்கள், 20 பவுண்டரிகளையும் அடித்துள்ளது. மும்பை அணி பௌலர்கள் 8 ரன்களையே எக்ஸ்ட்ராஸ் ஆக கொடுத்த நிலையில், டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் 17 ரன்களை எக்ஸ்ட்ராஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
புள்ளிப்பட்டியலில் மாற்றம்
டெல்லி அணியில் மெக்கர்க், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட், ஸ்டப்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இதில் மெக்கர்க் 27 பந்துகளில் 11 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 84 ரன்களை அதிகபட்சமாக அடித்தார். மறுபுறம், இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பெரிய ரன்களை குவிக்காவிட்டாலும் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் ஜோடி மும்பை அணிக்கு மிடில் ஓவர்களில் நம்பிக்கை அளித்தது.
பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் ஒன்றுமே இல்லை என்ற நிலையிலும் முகேஷ் குமார், ரஷிக் தர் சலாம் ஆகியோர் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக வீசியதால் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் டெல்லி அணி 10 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை அணி அதே 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க | ஹைதராபாத்தை அடக்க சிஎஸ்கே பிளான்... கைக்கொடுக்குமா சேப்பாக்கம்? - இதுதான் மேட்டர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ