இந்தியாவின் வீக்னஸ் இதுதான்... அந்த இடத்தில் அடிங்க - ஆஸ்திரேலியாவுக்கு மூத்த வீரர்கள் டிப்ஸ்!
India vs Australia Final 2023: உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கான வியூகத்தை பல மூத்த வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
India vs Australia Final 2023: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.19) அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சொந்த மண் என்ற சாதகத்துடனும், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு (World Cup Final 2023) வந்த ஆஸ்திரேலியா அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சாம்பியன் அணி என்ற சாதகத்துடனும் உலகக் கோப்பையை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
அழுத்தமும், ஆதிக்கமும்...
நடப்பு தொடரில் இந்தியா அணி (Team India) 10 போட்டிகளில் தொடர் வெற்றி, ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் தொடர் வெற்றி போன்ற கடந்த கால சாதனைகள் ஏதும் இந்த இறுதிப்போட்டியில் எடுப்படாது. இறுதிப்போட்டி என்றாலே அழுத்தம் அதிகமாக இருக்கும். போட்டி சூழலையும், அழுத்தத்தையும் யார் சரியாக கையாள்கிறார்களோ அவர்கள்தான் போட்டியில் ஆதிக்ககத்தை செலுத்த முடியும் என்பதால் இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே அழுத்தம் இல்லாமல் பொறுமையாக விளையாட திட்டமிடும்.
பலரும் தங்களின் கணிப்புகளையும், இரு அணிகளுக்கு வியூகங்களை தெரிவித்து வரும் இந்த வேளையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்களான இயான் மோர்கன், நாசர் ஹுசைன் உள்ளிட்டோர் இந்திய அணியின் பலவீனம் குறித்தும், இந்திய அணியை வீழ்த்தும் வியூகம் குறித்தும் பேசியுள்ளனர்.
மேலும் படிக்க | உலகக் கோப்பை இந்த அணிக்குதான்... அடித்துச் சொல்லும் பிரபல ஜோதிடர்
அழுத்தம் இந்தியா மீதுதான்...
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் கூறியதாவது,"இதில் நிறைய மனரீதியான தயாரிப்பு வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பையில் இந்தியா கொண்டிருக்கும் ஆதிக்கத்தை முறியடிக்க அதிக வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது. ஆஸ்திரேலியாவிடம் உள்ள எதிர்பார்ப்புகளின் நிலைக்கு இந்தியா கொஞ்சம் ஆட்டம் காணும் என்று நம்புகிறேன். இருப்பினும், இந்தியா அதன் ஆதிக்கத்தை தொடரும்.
இந்த இந்திய அணியில் பலவீனத்தைக் கண்டறிவது கடினம்தான். அவர்கள் அனைத்து அடிப்படைகளிலும் தெளிவாக உள்ளனர். தங்கள் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்ட பிறகும், இந்தியர்கள் தங்களின் ஆதிக்கத்தை விடவில்லை" என்றார்.
பலவீனம் எது?
மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறுகையில்,"ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் குறிவைத்து பேட்டிங் செய்யும் போது ஆஸ்திரேலியா தங்கள் பந்துவீச்சில் பலவீனத்தைக் கண்டறிய வேண்டும். அவர்களில் யாராவது சொதப்பினால் அவரை விடாமல் அவர் மீது ஆதிக்கம் செலுத்த தொடங்க வேண்டும்.
இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் மீது எந்த அணியும் செல்லவில்லை. அரையிறுதியில் நியூசிலாந்து சிராஜ் மீது ஆதிக்கம் செய்தனர். இந்த இந்திய தரப்பில் உள்ள விஷயம் என்னவென்றால், சிராஜ் அடி வாங்கினால், ஷமி திரும்பி அடிக்கிறார். பும்ரா டெத் ஓவர்களில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார். ஆனால், ஆஸ்திரேலியா இந்த இடத்தில் ரோஹித் (Rohit Sharma) மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மோர்கன் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு இந்திய பந்துவீச்சாளர் மீதும் ஆஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்றும் அவர்களில் யார் முதலில் தடுமாற்றம் செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார். ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளர் சிரமப்படுவதை நீங்கள் கண்டால், அது முகமது ஷமியாக (Mohammed Shami) கூட இருக்கலாம், யாராக இருந்தாலும், நீங்கள் அவருக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
'ஆஸ்திரேலியா இதை செய்ய வேண்டும்'
ரோஹித் அணியில் உள்ள ஐந்து பிரீமியம் பந்துவீச்சாளர்களை மட்டும் பயன்படுத்தாமல் மற்றவர்களும் (விராட், சூர்யகுமார், கில்) ஆஸ்திரேலியா உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆஸ்திரேலியாவை போல் இந்தியாவிடம் சில டைட் ஓவர்கள் வீசக்கூடிய பகுதி நேர வீரர்கள் இல்லை. அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவின் இரண்டு முக்கியமான பேட்டர்களை ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட்டின் ஆஃப் ஸ்பின் உதவியது, அதே நேரத்தில் ஆடம் ஜாம்பா போராடிய நாளில் கிளென் மேக்ஸ்வெல் சிக்கனமான பத்து ஓவர்களை வீசினார். இந்தியாவின் பந்துவீச்சு ஆப்ஷன்கள் குறைவாகவே உள்ளன, அவற்றில் ஒரு மோசமான நாள் இருந்தால், அந்த சிறிய பலவீனம் ஆஸ்திரேலியாவால் நல்ல பலனைப் பெற முடியும்" என்றார்.
மேலும் படிக்க | இந்தியாவுக்கு 40% சான்ஸ்... ஆனால் ஆஸ்திரேலியாவுக்குதான் கப்பு - காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ