உலகக் கோப்பை இந்த அணிக்குதான்... அடித்துச் சொல்லும் பிரபல ஜோதிடர்

Astrological Prediction: உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நிலையில், பிரபல ஜோதிடர் ஒருவர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 17, 2023, 08:23 PM IST
  • ரோஹித் சர்மாவின் ஜோதகம் 2011இல் தோனியை போன்றுள்ளது - பிரபல ஜோதிடர்
  • பாட் கம்மின்ஸின் ஜாதகம் நல்ல நிலையில் உள்ளது - பிரபல ஜோதிடர்.
  • ஆனால் அதீத நம்பிக்கையோடு இந்தியா விளையாட கூடாது - பிரபல ஜோதிடர்.
உலகக் கோப்பை இந்த அணிக்குதான்... அடித்துச் சொல்லும் பிரபல ஜோதிடர் title=

World Cup 2023 Final, Astrological Prediction: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) இறுதிப்போட்டியில் இரண்டு முறை சாம்பியனான இந்தியாவும், ஐந்து முறை சாம்பியனுமான ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. கிரிக்கெட் தரப்பில் இருந்தும், பிரபலங்கள், ரசிகர்கள் தரப்பில் இருந்தும் பலரும் தங்களின் கணிப்புகளை அள்ளிவீசும் நிலையில், ஜோதிட ரீதியாகவும் பலரும் தங்களின் கணிப்பை தெரிவித்து வருகின்றனர். இந்தியா - ஆஸ்திரேலியா என இரு வீரர்களையும் ஜோதிட ரீதியாக எடுத்துச்சொல்லி பிரபல ஜோதிடர் ஒருவர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். 

பிரபல ஜோதிடர் பண்டிட் ஜகன்னாத் குருஜி கூறுகையில், ஜோதிட ரீதியாக இரு நாட்டையும் கணக்கில் எடுத்து பார்க்கும்போது ஆஸ்திரேலியாவை விட இந்தியாவுக்குதான் அதிக வாய்ப்பிருக்கிறது என்றார். குறிப்பாக, இந்திய அணி கோப்பையை தூக்கவே அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறுகின்றனர். 

மேலும் அவர்,"இந்த உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் ஜாதகம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இது அவரது தலைமைத்துவத் திறமைக்கு உதவியது. மேலும், ரோஹித்தின் கிரக நிலைகளும் சீரமைப்பும் 2011 உலகக் கோப்பையில் மகேந்திர சிங் தோனிக்கு இருந்ததை போலவே உள்ளது. நவம்பர் 19ஆம் தேதி அன்று அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் வென்று உலகக் கோப்பையை அவர் தனக்காகவும் அணிக்காகவும் பெற்றுத் தருவார் என்பதை இது குறிக்கிறது" என்றார். 

மேலும் படிக்க | இந்தியாவுக்கு 40% சான்ஸ்... ஆனால் ஆஸ்திரேலியாவுக்குதான் கப்பு - காரணம் என்ன?

அதீத நம்பிக்கை கூடாது

சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்களின் ஜாதகத்தில் சில கிரகங்கள் வலுவாக இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இவை அவர்கள் வெற்றிக்கு முழுமையாக தயாராக உள்ளனர் என்பதை குறிக்கிறது. அவர்கள் வரும் ஞாயிற்றுகிழமை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வரலாறு படைக்க முடியும். இருப்பினும், இந்தியாவின் எட்டாவது வீட்டில் செவ்வாய் இருப்பது இந்திய வீரர்கள் தங்கள் பலத்தில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் அதிக நம்பிக்கையைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது, இது அவர்களுக்கு சவால்களை உருவாக்கும்" என்றார். 

ஜகன்னாத் குருஜியின் ஆஸ்திரேலிய அணியின் ஜாதகம் குறித்து கூறுகையில், "ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் ஜாதகம் நல்ல நிலையில் உள்ளது, இது நல்ல கிரக சீரமைப்பு மற்றும் தலைமைத்துவ திறன்களை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.  இருப்பினும், ரோஹித்தின் ஜாதகத்துடன் ஒப்பிடும் போது, அவருடையது சற்று பின்னடைவில்தான் உள்ளது" என்று அவர் கூறினார். இதற்கிடையில், ஆஸ்திரேலிய அணியில் இருந்து டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகியோர் ஆட்டத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்கள்" என்றார். 

மேலும் படிக்க | ஆஸ்திரேலியானா அஸ்வின் தான்... பைனலில் இந்த வீரருக்கு ஆப்பு - என்ன காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News