ரூ.1 லட்சத்துக்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய பைக்குகள்..!
இந்தியாவில் இப்போது இருக்கும் சூழலில் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய பைக்குகளைப் அறிந்து கொள்வோம்.
Honda எஸ்பி 125
123.94 சிசி என்ஜினை கொண்டுள்ள இந்த பைக்கானது, 7500rpm-ல் 8kW பவரையும், 6000 rpm-ல் 10.9N-mஐயும் வெளிப்படுத்தக்கூடியது. 5 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் இந்த இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. விலையை பொறுத்த வகையில் எக்ஸ் ஷோரூம் விலையாக 80,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
TVS ஸ்டார்சிட்டி Plus
டிவிஎஸ் நிறுவனத்தில் அதிகம் விற்பனையாகக்கூடிய மாடல்களில் இதுவும் ஒன்று. இதுவரை 30 லட்சம் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்குகளை அந்த விற்பனை செய்துள்ளது. இந்த பைக் மிகச்சிறந்த ஃபூயல் எக்கனாமியையும், கட்டமைப்பையும் கொண்டுள்ளது. 125 சிசி சிங்கிள் சிலிண்டரை கொண்டுள்ள இந்த பைக் 7350rpm-ல் 6.03 kW-ஐயும், 4500rpm-ல் 8.7Nm-ஐயும் வழங்குகிறது. 4 ஸ்பீட் கான்ஸ்டண்ட் மெஷ் ட்ரான்ஸ்மிஷனில் என்ஜின் வருகிறது. எக்ஸ்ஷோரூம் விலையில் 70,200 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | மின்சாரம் இல்லாதபோது ஏசியை பயன்படுத்துவது எப்படி?
TVS ரைடர் 125
இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக், பல்வேறு சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. இந்த பைக்கில் முழுதாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ருமெண்ட் கன்சோல், ரைடிங் மோட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுதவிர விரைவில் கனெக்டிவிட்டி ஆப்ஷனும் தரப்படவுள்ளது. எக்ஸ் ஷோரூம் விலை 77,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | இண்டர்நெட் வேகம் பன்மடங்கு அதிகரிக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்...
ஹீரோ ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட்
ஸ்பிளெண்டர் பைக் இந்தியாவில் அதிகம் விற்கப்பட்ட இருசக்கர வாகனமாக உள்ளது. ஃபூயல் இன்செக்ஷன் உள்ளிட்ட ஏகப்பட்ட புது அம்சங்கள் கடந்த சில ஆண்டுகளாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐ3எஸ் தொழில்நுட்பம், டூயல் டோன் நிறங்கள், டைமண்ட் பிரேம் உள்ளிட்டவையும் இதில் தரப்பட்டுள்ளன. 70,390 ரூபாய்க்கு இந்த பைக் விற்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR