AsiaCup2018: 136 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி..!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 136 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது...!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 136 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது...!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும் அதன்பின்னர் வந்த வீரர்கள் பொறுப்புடன் விளையாடினார்.
இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய குல்பதின் நயீபும், ரஷித் கானும் 200 ரன்களுக்கு மேல் குவிக்க உதவினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹஷ்மலுல்லா ஷாகிதி 58 ரன்கள் குவித்தார். ரஷித்கான் 57 ரன்கள், குல்பதின் நயீப் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் ஷாகி அல் ஹசன் 4 விக்கெட்டுகளைப் கைப்பற்றினார்.
பின்னர் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி ஆப்கான் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முடிவில் அந்த அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.