கோப்பையை தூக்கும் முனைப்பில் கோலி... சேஸிங்கில் வரலாற்று சாதனை படைக்குமா இந்தியா?
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 280 ரன்கள் தேவைப்படுகிறது. நாளை ஒருநாள் ஆட்டம் முழுவதுமாக உள்ள நிலையில், இந்தியாவிடம் 7 விக்கெட்டுகள் கைவசம் உள்ளது.
WTC Final 2023: இந்தியா - ஆஸ்திரேலியா மோதி வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது எனலாம்.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 469 ரன்களுடனும், இந்தியா 296 ரன்களுடனும் ஆட்டமிழந்தது. 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு லபுஷேன் நல்ல இன்னிங்ஸை விளையாடினாலும், அவர் இன்றைய தொடக்க ஓவரிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். கிரீனும் சற்று நேரத்தில் ஆட்டமிழந்தாலும், அலெக்ஸ் கெரி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை விளையாடி வந்தார்.
ஆஸி., டிக்ளர்
இரண்டாவது செஷனிலும் ஸ்டார்க் ரன்களை குவிக்க ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் எகிறியது. அப்போது 80 ஓவர்கள் முடிந்த நிலையில், இந்திய அணிக்கு புதிய பந்து கொடுக்கப்பட்டது. புதிய பந்து வந்த பின்னும் சற்று ரன்கள் சரிந்தாலும், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து, கம்மின்ஸ் இன்னிங்ஸை டிக்ளர் செய்தார். அலெக்ஸ் கேரி 66 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3, ஷமி, உமேஷ் ஆகியோர் தலா 2, சிராஜ் 1 விக்கெட்டை எடுத்தனர்.
வரலாற்று சாதனை படைக்குமா?
இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் குறிப்பாக, சர்வதேச டெஸ்ட் போட்டி வரலாற்றிலேயே அதிகபட்சமாக 418 ரன்கள் சேஸ் செய்யப்பட்டிருக்கிறது. ஒருவேளை 444 ரன்களை இந்தியா வெற்றிகரமாக சேஸ் செய்துவிட்டால் அது வரலாற்று சாதனையாக பதிவாகும். டெஸ்டில் மிகப்பெரிய வரலாற்று சாதனையுடன் கோப்பையை இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
சர்ச்சை கேட்ச்
இந்த எதிர்பார்ப்புடன் இந்திய அணியின் ஓப்பனர்கள் களமிறங்கினர். கடந்த இன்னிங்ஸை போலவே ரோஹித் - கில் ஜோடி அதிரடி ஆட்டத்தை ஆடியது. இருப்பினும், போலாண்ட் பந்துவீச்சில் கிரீனின் சர்ச்சைக்குரிய கேட்ச்சால் கில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 2 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 18 ரன்களை எடுத்து அதிரடி மோடில் இருந்ததது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஏய் உனக்கு மூளை இருக்கா? ராகுல் டிராவிடை விமர்சிக்கும் பாசித் அலி மீது விமர்சனம்
ரோஹித் - புஜாரா
அடுத்து வந்த புஜாரா, ரோஹித்துடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இந்த ஜோடி 51 ரன்களை எடுத்த வேளையில், ரோஹித் 43 ரன்களில் லயான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த ஓவரில் புஜாராவும் 27 ரன்களில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
விராட் அசத்தல்
இதன்பின் ஜோடி சேர்ந்த விராட் - ரஹானே ஜோடி மிகவும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் விளையாடியது. குறிப்பாக விராட் பவுண்டரிகளை பறக்கவிட்டு வந்தார். இன்றைய நான்காம் நாள் முடிவில், இந்திய அணி (40 ஓவர்கள்) 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம், 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்தியா உள்ளது. விராட் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஒரே அணி என்ற பெருமை கிடைக்குமா?
நாளைய ஒருநாளில் ஏறத்தாழ 97 ஓவர்கள் வீசப்பட வேண்டிய நிலையில், இந்தியா இந்த இலக்கை எட்டிவிடும் முனைப்பில் உள்ளது. கடந்த முறை தவறவிட்ட கோப்பை வேண்டுவிட வேண்டும் என ரசிகர்களும் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். டெஸ்டில் இந்தியாவை வேற ஒரு தளத்திற்கு அழைத்துச் சென்ற விராட் கோலி கையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தழுவ வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், இந்தியா ஒருவேளை இந்த கோப்பை வென்றால், மூன்று ஃபார்மட்டிலும் உலகக்கோப்பைகளை வென்ற ஒரு அணி என்ற பெருமையையும் இந்தியா பெறும் என்பது நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | தோனிக்கு உடன் பிறந்த அண்ணன் இருக்கிறாரா? வெளிவராத உண்மை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ