நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லுமா இந்திய அணி?
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 325 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியை வெறும் 62 ரன்னில் ஆல்-அவுட் செய்தது இந்தியா. பின்பு இந்திய அணி பாலோஆன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.
ALSO READ நாங்க வேற மாரி! 62 ரன்னில் நியூஸிலாந்தை சுருக்கிய இந்தியா!
இரண்டாவது இன்னிங்சில் 276 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது. 540 ரன்களை நியூசிலாந்து அணிக்கு டார்கெட் ஆக செட் செய்தது இந்தியா. மிகப்பெரிய டார்கெட்டை எதிர்த்து அடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை போலவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
அஸ்வினின் மாயாஜால சூழலில் நியூசிலாந்தின் டாப் ஆர்டர் சரிந்தது. 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி அஸ்வின் எட்டு மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் அடித்து இருந்தது. இன்னும் 5 விக்கெட்டுகள் மீதமிருக்க நியூசிலாந்து வெற்றிக்கு 400 ரன்கள் தேவைப்படுகிறது. ரவீந்திரா மற்றும் நிகோலஸ் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து விக்கெட்களை விரைவாக இந்தியா எடுக்கும் பட்சத்தில் இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. நடந்துமுடிந்த டி20 தொடரையும் இந்திய அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ மைதானத்தில் சறுக்கி விளையாடிய பங்களாதேஷ் வீரர்! வைரல் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR