நாங்க வேற மாரி! 62 ரன்னில் நியூஸிலாந்தை சுருக்கிய இந்தியா!

முதல் இன்னிங்சில் நியூஸிலாந்து அணியை 62 ரன்களில் ஆல் அவுட் ஆக்கி உள்ளது இந்திய அணி.  

Written by - ZEE Bureau | Last Updated : Dec 4, 2021, 04:25 PM IST
நாங்க வேற மாரி! 62 ரன்னில் நியூஸிலாந்தை சுருக்கிய இந்தியா!

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மும்மையில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.  நேற்றைய நாள் முடிவில் இந்திய அணி 221 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது.  இதனையடுத்து இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது.  இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் 150 ரன்கள் அடித்து அசத்தினார்.

ALSO READ ஒமிக்ரான் பீதி: இந்தியா-தென்னாப்ரிக்கா தொடர் ஒத்திவைப்பு

அக்சர் படேல் அரைசதம் அடித்து அசத்த இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது.  325 ரன்கள் அடித்த நிலையில் இந்திய அணி 10 விக்கெட்களையும் இழந்தது.  நியூஸிலாந்து அணியில் அஜாஸ் படேல் இந்திய அணியின் அனைத்து விக்கெட்களையும் எடுத்து அசத்தினார்.  அதனை தொடர்ந்து களம் இறங்கிய நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்கள் திணறடித்தனர்.  ஆரம்பம் முதலே வேகத்தில் அசத்திய சிராஜ் முதல் 3 விக்கெட்களை அடுத்தடுத்து எடுத்து அசத்தினார்.  

 

நியூஸிலாந்து அணி 62ரன்கள் எடுத்து இருந்தே போதே அனைத்து விக்கெட்களையும் இழந்தது.  அஸ்வின் 4 விக்கெட்களை எடுத்து விரைவாக விக்கெட்களை எடுக்க உதவினார்.  263 ரன்கள் முன்னிலையில் தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஆடி வருகிறது.  

 

ALSO READ Ind vs NZ: இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அஜாஸ் படேல் சாதனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News