2021 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டார்.  உலக கோப்பை போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடியது.  அப்போது பாகிஸ்தான் வீரர் ஷாநவாஸ் தஹானி தோனியுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.  இது குறித்து ஷாநவாஸ் தஹானி, எம்எஸ் தோனியைச் சந்தித்தது தனக்கு ஒரு கனவு நனவான தருணம் என்றும் அதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL2022: சிஎஸ்கே-வில் இருந்து வெளியேறப்போகும் மற்றொரு வீரர்


23 வயதான பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானி, கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு அளித்த பேட்டியில், "நான் நியூசிலாந்தின் ஷேன் பாண்டைப் பின்தொடர்ந்தேன், அவரைப் போலவே வேகமான வேகப்பந்து வீச்சாளராக மாற விரும்பினேன், ஆனால் அவர் ஓய்வு பெற்ற பிறகு, இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சரைப் பின்தொடரத் தொடங்கினேன், விரைவில் அவரைச் சந்திக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.  



மகேந்திர சிங் தோனியை பற்றி நான் பேசி முடிக்க நீண்ட நேரம் எடுத்து கொள்வேன்.  அவரைச் சந்திப்பது எனக்கு ஒரு கனவு ஆகும், அந்த தருணத்தை என்னால் மறக்க முடியாது. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், பெரியவர்களை மதித்தல் போன்றவற்றைப் பற்றி அவர் எனக்குச் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கிரிக்கெட்டில் கெட்ட மற்றும் நல்ல நாட்கள் இருக்கும், ஆனால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு, நீங்கள் மிகவும் விரும்பும் விளையாட்டிற்காக அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்" என்று தோனி என்னிடம் கூறினார்.  



உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியுற்றது.  இறுதி போட்டியில் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய நிலையில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது.


மேலும் படிக்க | தோனியை கலாய்த்த KKR! தக்க பதிலடி கொடுத்த ஜடேஜா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR