ஆசிய கோப்பை 2022: உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை ஈஇன்னும் சில நாட்களில் தொடங்கும் ஆசிய கோப்பையின் மீதே உள்ளது. ஆசிய கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 2021 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு, இரு அணிகளும் சந்திக்கும் போட்டி இது. எனவே இந்த முறை கடந்த தோல்விக்கு இந்திய அணி பழிவாங்கும் முனைப்பில் உள்ளது. ஆனால் இந்த போட்டிக்கு முன், இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் ஒரு வீரரின் ஃபார்ம் ரோகித் சர்மாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வீரரின் மோசமான ஃபார்ம்


இந்திய அணியின் நட்சத்திர தொடக்க பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல், காயத்திற்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியை அவர் வழிநடத்தியபோதும், எதிர்பார்த்த அளவுக்கு அவரது பேட்டிங் இல்லை. இந்த தொடரில் அவர் விளையாடுவதன் மூலம் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. ஆசியக்கோப்பையில் சிறப்பாக விளையாடுவாரா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.  


மேலும் படிக்க | ஐபிஎல் 2023; பதறிப்போன மயங்க் அகர்வால்...விளக்கம் கொடுத்த பஞ்சாப்


கத்துக்குட்டி அணியிடம் தடுமாற்றம்


காயத்தில் இருந்து ராகுல் வந்திருப்பதால் உடனடியாக ஆசியக்கோப்பைக்கு அனுப்பக்கூடாது என முடிவெடுத்த பிசிசிஐ, ஜிம்பாப்வே தொடரில் விளையாட அனுமதித்தது. கடைசி நேரத்தில் தவானை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ராகுலை கேப்டனாக நியமித்தது. அவரின் வழிகாட்டலில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், ராகுலின் ஆட்டம் மெச்சத் தகுந்தளவில் இல்லை. இது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தலைவலியாக மாறியுள்ளது. 


என்ன முடிவெடுப்பார் ரோகித்?


ஏற்கனவே கோலி ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். ஆசியக்கோப்பையில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தற்போது ராகுலின் ஃபார்மும் கவலைக்குரியதாக இருக்கிறது. இப்படியான சூழலில் இருவரையும் களமிறக்கினால் அது அணிக்கு பாதிப்பை கூட ஏற்படுத்தலாம். முதல் போட்டியே பாகிஸ்தான் அணியுடன் என்பதால், என்ன செய்வது என யோசனையில் இருக்கிறாராம் ரோகித் சர்மா. 


மேலும் படிக்க | பும்ரா போல பந்துவீசி கலாய்த்த ஹர்திக் பாண்டியா! வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ