இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் தற்போது பரபரப்பு நிலவுகிறது. நேற்று (புதன்கிழமை) இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது செய்தியாளர் சந்திப்பில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் அறிக்கை "தவறானது, அதில் உண்மை இல்லை" என்று தெரிவித்திருந்தார். இந்த சர்ச்சைக்குரிய பிரச்சினை குறித்து முதல் முறையாக இன்று (வியாழக்கிழமை) வாரியத் தலைவர் கங்குலி மவுனத்தை கலைத்துள்ளார். அதாவது இந்த விவகாரத்தை "பிசிசிஐ" (BCCI) பார்த்துக்கொள்ளும் என்று அவர் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அவர் செய்தியாளர் சந்திப்பில், "ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தன்னை நீக்குவது குறித்த தகவல் டெஸ்ட் அணியின் அறிவிப்புக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு தான் வழங்கப்பட்டதாக விராட் கூறியிருந்தார். அதே நேரத்தில் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும்போது ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருக்க விரும்புவதாக நான் தெளிவுபடுத்தி இருந்தேன் என்றார்.


ஆனால் நான் கேப்டன் அல்ல என்பதை அவர்கள் (பிசிசிஐ) தான் தீர்மானித்தார்கள். நான் அல்ல. கடைசியில் தான் என்னிடம் சொன்னார்கள். நான் எந்த ஓய்வையும் வாரியத்திடம் கேட்கவில்லை. அணிக்காக விளையாட வேண்டும் என்கிற நோக்கம் எப்போதும் குறையாது. எப்போதும் போல அணிக்காக விளையாட தயாராக இருப்பேன் என்றார்.


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட தயாராக உள்ளேன். எனக்கும் ரோஹித்துக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. இதை 2 ஆண்டுகளாக கூறி, சோர்ந்துவிட்டேன். ரோஹித் ஷர்மா ஒரு திறமையான தலைவர் என்பதை அவர் இந்திய அணியைத் தலைமை தாங்கி வழிநடத்திய போதும், ஐபிஎல் போட்டிகளிலும் பார்க்க முடியும்.


ALSO READ | நான் கேப்டன் அல்ல என்பதை அவர்கள்தான் தீர்மானித்தார்கள் - விராட் கோலி


என் பொறுப்புக்கு நான் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தேன். என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை செய்தேன் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும் என்றார்.


இதற்கு முன்னதாக பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி (Sourav Ganguly), "டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய போது, அவரை பதவி விலக வேண்டாம் என்று தடுத்ததாகவும், ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன், டி-20 அணிக்கு ஒரு கேப்டன் என இரண்டு பேர் ஒரே நேரத்தில் இருக்க முடியாது என்பதால் தாங்களே கேப்டன் பதவியில் தொடர வேண்டும் என்று அவரிடம் கூறியதாக கங்குலி தெரிவித்திருந்தார். மேலும் அவரிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தபடி, அவரின் சம்பத்தத்துடன் தான் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.


அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். இதனையடுத்து விராட் கோலி ரசிகர்கள் "கங்குலி பொய் பேசியதாக" சமூக ஊடங்களில் தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்தனர். 


இந்தநிலையில், இன்று விராட் கோலியின் கருத்து குறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியின் பேட்டி குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அதுவும் தற்போது கூறினால் அது சரியாக இருக்காது. இந்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்து கொள்ளும். சரியான நேரத்தில் சரியான பதில் அளிக்கும். இந்த விவகாரத்தை நாங்கள் தீர்த்து வைப்போம்.. அதை பிசிசிஐ-யிடம் விடுங்கள் என்றார்.


ALSO READ | கேப்டன் விராட் கோலியின் கருத்துக்கு BCCI பதிலடி! திரைக்கு பின் நடந்தது என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR