டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் அறிவிப்பிற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே நான் ஒருநாள் தொடர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கபட்டுள்ளேன் என்பது தெரியும் என்று கோலி கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத விதமாக ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த அறிவிப்பு சம்பந்தமாக விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். டெஸ்ட் அணி அறிவிக்கப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு தான் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா என்னை தொடர்பு கொண்டு இனி இந்திய அணியின் ஒருநாள் போட்டி கேப்டனாக நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்று கூறினார். மேலும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்படுவீர்கள் என்று தெரிவித்தார். மேலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளார் ODI போட்டிகளில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்ற தவறான தகவல் பரவி வருகிறது. அது முற்றிலும் பொய்யான செய்தி.
புதிய டி20 கேப்டன் பதவி யாருக்கு வழங்குவது பற்றி டிசம்பர் 8ஆம் தேதி வரை என்னிடம் யாரும் பேசவில்லை. டெஸ்ட் அணி தேர்வுக்கு முன்பு எனக்கு அழைப்பு வந்தது. தலைமை தேர்வாளர் என்னுடன் டெஸ்ட் அணியைப் பற்றி விவாதித்தார், அதன் பின்பு ஐந்து தேர்வாளர்களும் நான் ODI கேப்டனாக இருக்க மாட்டேன் என்று கூறினார்கள், அதற்கு நான், 'சரி, சரி' என்று பதிலளித்தேன். அதன்பிறகு இந்த முடிவை பற்றி சிறிது நேரம் பேசினோம். இதுதான் நடந்தது. அதற்கு முன் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை என்று கோலி தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலக உள்ளதாக வந்த தகவல் பற்றி கேட்கபட்ட போது, நான் எப்போதும் அணியில் இருப்பேன், எந்த நேரத்திலும் போட்டிக்கு தயாராக இருக்கிறேன். உண்மையாக இந்தக் கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்கக் கூடாது. இந்த பொய்யான தகவலை பற்றி எழுதுபவர்களிடம் தான் இந்த கேள்வியைக் கேட்க வேண்டும். நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்று பிசிசிஐயிடம் கூறியதாக வந்த தகவல்கள் அனைத்தும் உண்மை இல்லை. நான் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன், மேலும் நான் எப்போதும் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
ALSO | நான் தலைமை பயிற்சியாளராக இருந்ததில் பலருக்கும் அதிருப்தி- ரவி சாஸ்திரி ஓபன் டாக்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR