புதுடெல்லி: ஜனவரியில் நடக்கவிருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில், சில வீரர்கள் மீது கோடியில் பண மழை பொழிந்தால், சில அனுபவசாலிகளோ எந்த அணியாலும் தேர்ந்தெடுக்கப்படாமல் போகலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த ஐபில் அணியிலும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த வீரர்களின், விளையாட்டு வாழ்க்கை நிரந்தரமாக முடிவடையும் என்று கணிக்கப்படும் பட்டியலில் முதல் இடங்களை பிடிக்கும் வீரர்கள் இவர்கள்...
 
ஐபிஎல் 15வது சீசனில் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஐபிஎல் வாழ்க்கை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கும் பல வீரர்கள் உள்ளனர். ஏலத்தில் இந்த வீரர்களுக்கு மவுசு இருக்காது என்று பலரும் கருதும் அனுபவசாலி வீரர்களில் ஹர்பஜன் சிங் முதலிடத்தில் இருக்கிறார்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இனி ஹர்பஜன் சிங்கை வாங்காது என நம்பப்படுகிறது.  40 வயதைத் தாண்டிவிட்ட ஹர்பஜன் சிங்கின் (Harbhajan Singh) பந்துவீச்சு முன்பு போல் இல்லை. தனது கேப்டன்சியின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்ற ஹர்பஜன், ஐபிஎல் தொடரில் பல சீசன்களில் கேப்டனாகவும் விளையாடியுள்ளார்.


கடந்த ஆண்டு அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkatta Knight Riders) அணி தக்க வைத்தக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தினால், பல அணிகளும் இவரை கண்டு கொள்ளவில்லை. ஏலத்திற்கு வந்த ஹர்பஜனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மட்டும் இவருக்கு விலைசொன்னது. 2021 இல் ஏலத்திற்கு வந்த அவரது அடிப்படை விலை 2 கோடி ரூபாய். அதே விலையில் தான்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டது.  



அஜிங்க்யா ரஹானேவை யாரும் வாங்க மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ரஹானேவை அவரது அணி தக்கவைக்கவில்லை.


ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காகவும் விளையாடியுள்ள அஜிங்க்யா ரஹானே (ajinkya rahane) கேப்டனாகவும் இருந்துள்ளார். தற்போது ரஹானேவின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதும், ஐபிஎல் போட்டிகளில் அவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை என்பதால் ரஹானேவின் ஐபில் எதிர்காலம் அஸ்தமனமாகலாம்.


ஐபிஎல் 2021 இல், அவர் பெரிதாக விளையாடவில்லை என்றால், 2020ஆம் ஆண்டு ஐபில் போட்டித்தொடரில் மொத்தம் 9 போட்டிகளில் விளையாடி, 113 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரி 14 ரன்கள் என்ற அவரது செயல்திறன், ஐபிஎல் 2022 க்கான மெகா ஏலத்தில் விற்கப்படாதவர்களின் பட்டியலில் ரஹானேவும் சேர்க்கப்படலாம் என்ற நிலைக்குத் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.  



புஜாரா டெஸ்ட் ஜாம்பவான் மட்டுமே


டெஸ்ட் ஜாம்பவான் சேதேஷ்வர் புஜாராவுக்கும், வரவிருக்கும் ஏலம் ஏமாற்றம் தரலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் சென்னை அணி (Chennai Super Kings) 50 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்கியது. ஆனால், ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இருந்து சேதேஷ்வர் புஜாரா விடுவிக்கப்பட்டார்.


ஐபிஎல்லில் புஜாரா சிறப்பாக எதையும் செய்யவில்லை. 30 ஐபிஎல் போட்டிகளில் 22 இன்னிங்ஸ்களில் 20.53 சராசரியில் 390 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். புஜாராவின் ஸ்டிரைக் ரேட்டும் 100க்கும் குறைவாகவே உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் புஜாரா ஏமாற்றம் அளித்தார்.



இந்த ஜாம்பவான்கள் தவிர, ஐபிஎல் வாழ்க்கை முடிவடையும் தருவாயில் இருக்கும் பல வீரர்கள் உள்ளனர். இவர்களில் பியூஷ் சாவ்லா, தினேஷ் கார்த்திக், ஆரோன் பின்ச், குல்தீப் யாதவ், வருண் ஆரோன், மார்ட்டின் கப்டில், கிறிஸ் லின், அம்பதி ராயுடு, இம்ரான் தாஹிர் மற்றும் சுரேஷ் ரெய்னா (Suresh Raina) ஆகியோர் அடங்குவர். 


ரெய்னா மீது சென்னைக்கு இன்னும் நம்பிக்கை இருந்தாலும், மெகா ஏலத்தில் அவரை ஏதாவது அணி வாங்கலாம் என்ற வாய்ப்பு சிறிதளவு இருந்தாலும், 36 வயதான அவரை வாங்க அணிகள் தயாராக இருக்குமா என்பதும் சந்தேகம் தான்.


READ ALSO | மகளிர் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் லீக்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR