அரையிறுதியில் அசத்திய இளம் வீரர் கார்லோஸ்; இறுதிப்போட்டியில் காத்திருக்கும் காஸ்பர் ரூட்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவு அரையிறுதியில், அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாஃபோவை வீழ்த்தி 19 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார்.
நியூயார்க்: நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின், ஆடவர் பிரிவின் அரையிறுதிச் சுற்றுப்போட்டிகள் இன்று (இந்திய நேரப்படி) நடைபெற்றன. முதல் அரையிறுதிப்போட்டியில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்கார்ஸ் உடன் உள்ளூர் வீரரான பிரான்சிஸ் தியோஃபோ மோதினார். 19 வயதே ஆன கார்லோஸ், இத்தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
அதேபோல, இத்தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரும், நட்சத்திர வீரருமான ரஃபேல் நடாலை, அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியோஃபோ வீழ்த்தியிருந்தார். எனவே, பிரான்சிஸ் - கார்லோஸ் ஆகியோருக்கு இடையிலான இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
மேலும் படிக்க | அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் உலகின் நம்பர் 1 வீராங்கனை
போட்டி தொடங்கியதில் இருந்தே இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அதன்படி முதல் செட்டை கார்லோஸ் 6-7 (6-8) என்ற கணக்கில் பறிகொடுத்தார். இருப்பினும் அடுத்த இரு செட்களிலும் சுதாரித்துக்கொண்ட கார்லோஸ், 6-3, 6-1 என்ற கணக்கில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றார். மறுமுனையில், தொடர்ந்து போராடிய பிரான்சிஸ் தியோஃபோ நான்காவது செட்டை 7-6 (7-5) என்ற கணக்கில் வென்று போட்டியை சமன்செய்தார். எனவே, போட்டி வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டிற்கு சென்றது.
ஆனால், இந்த செட்டில் கார்லோஸ் முழு ஆதிக்கம் செலுத்தி 6-3 என்ற கணக்கில், பிரான்சிஸ்-ஐ வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார். மேலும், 2005ஆம் பிரஞ்சு ஓபன் தொடர் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் வீரர் நடால் தனது 19ஆவது வயதில் தகுதிபெற்றதை போன்று, கார்லோஸ்-ம் தனது 19ஆவது வயதில் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்க தகுதிபெற்ற மிக இளமையான வீரர் என்ற பெருமையையும் கார்லோஸ் பெற்றார். குறிப்பாக, இந்த அரையிறுதிப்போட்டி, 5 மணி 22 நிமிடங்கள் வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஓபன் தொடரில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப்போட்டியில், நார்வோ வீரர் காஸ்பர் ரூட், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ்-ஐ 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். இதைத்தொடர்ந்து, அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில், கார்லோஸ் அல்கார்ஸ் உடன் காஸ்பர் ரூட் வரும் ஜீன் 12ஆம் தேதி மோத உள்ளார். டென்னிஸ் தரவரிசையில் கார்லோஸ் 4ஆவது இடத்திலும், காஸ்பர் ரூட் 7ஆவது இடத்திலும் உள்ளனர். இருவரும் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், தங்களின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ரெய்னாவை தொடர்ந்து ஓய்வை அறிவித்த மற்றொரு ஜாம்பவான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ