இலங்கை சர்வதேச டி20 அணியின் கேப்டன் சாமரி அட்டப்பட்டு, சிட்னியில் விளையாடிய ஆஸ்ட்ரேலியா மகளிர் அணிக்கு எதிராக இலங்கை மகளிர் டி20 போட்டியில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை அடித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.


ஆஸ்திரேலிய அணி டி20 போட்டிகளில் நிலையான செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வைட்வாஷ் செய்தனர். உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அவர்கள் அதிக விளையாட்டு நேரத்தைப் பெற விரும்புவதோடு, அவர்களின் திட்டங்களையும் திறன்களையும் நன்றாகப் புரிந்துகொள்ள முயற்சித்து வருகின்றனர்.


மறுபுறம், இலங்கை மகளிர் அணி, அனுபவமிக்க ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக மிகக் குறைவான எதிர்பார்ப்புகளுடன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.


இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. துவக்க ஆட்டக்காரர் பெத் மூனி 113(61) ரன்கள் குவித்து அணிக்கு பலம் செர்த்தார். 


இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை மகளிர் அணி களமிறங்கியது. அணி தலைவி சாமரி அட்டப்பட்டு அதிரடியாக விளையாடி 66 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தனது முதல் சர்வதேச டி20 சதத்தினை அட்டப்பட்டு பூர்த்தி செய்தார். எனினும் இவரை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் அடுத்தடுத்து வெளியேற, இலங்கை அணி ஆட்டத்தின் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.