Champions Trophy 2025 Schedule: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணை எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், ஹைபிரிட் மாடலில் போட்டிகள் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ள நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Champions Trophy 2025: பறிபோகும் சுப்மான் கில் இடம்! ஒருநாள் அணிக்கு வரும் ஜெய்ஸ்வால்!


பைனல் மார்ச் 9-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி பிப்ரவரி 20ம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகள் இடம் பெற்றுள்ளது. பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்தும் அணிகள் பெற்றுள்ளன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி 23-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.


8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தமாக 15 போட்டிகள் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி 2025 நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று மைதானங்களில் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது. லாகூர் மைதானத்தில் 2வது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் துபாயிலும், இல்லை என்றால் லாகூரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி விளையாடும் மூன்று குரூப் போட்டிகள் மற்றும் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெற உள்ளது.


குழுக்கள்:


குரூப் ஏ - பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம்


குரூப் பி - தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து


சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை:


பிப்ரவரி 19, பாகிஸ்தான் v நியூசிலாந்து, கராச்சி, பாகிஸ்தான்


பிப்ரவரி 20, பங்களாதேஷ் v இந்தியா, துபாய்


பிப்ரவரி 21, ஆப்கானிஸ்தான் v தென் ஆப்பிரிக்கா, கராச்சி, பாகிஸ்தான்


பிப்ரவரி 22, ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, லாகூர், பாகிஸ்தான்


பிப்ரவரி 23, பாகிஸ்தான் v இந்தியா, துபாய்


பிப்ரவரி 24, பங்களாதேஷ் v நியூசிலாந்து, ராவல்பிண்டி, பாகிஸ்தான்


பிப்ரவரி 25, ஆஸ்திரேலியா v தென் ஆப்பிரிக்கா, ராவல்பிண்டி, பாகிஸ்தான்


பிப்ரவரி 26, ஆப்கானிஸ்தான் v இங்கிலாந்து, லாகூர், பாகிஸ்தான்


பிப்ரவரி 27, பாகிஸ்தான் v பங்களாதேஷ், ராவல்பிண்டி, பாகிஸ்தான்


பிப்ரவரி 28, ஆப்கானிஸ்தான் v ஆஸ்திரேலியா, லாகூர், பாகிஸ்தான்


மார்ச் 1, தென்னாப்பிரிக்கா v இங்கிலாந்து, கராச்சி, பாகிஸ்தான்


மார்ச் 2, நியூசிலாந்து v இந்தியா, துபாய்


மார்ச் 4, அரையிறுதி 1, துபாய்


மார்ச் 5, அரையிறுதி 2, லாகூர், பாகிஸ்தான்


மார்ச் 9, இறுதிப் போட்டி, லாகூர் (இந்தியா தகுதி பெற்றால் துபாயில் நடத்தப்படும்)


மார்ச் 10, ரிசர்வ் நாள்


மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கம்? அதுவும் இந்த காரணத்திற்காக?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ