சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் - அரையிறுதிக்கு முன்னேறியவர்கள் யார்?
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸில் கேத்தே ஸ்வான், மக்டா லினெட் உள்ளிட்டோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. இதன் கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. ஒரு கால் இறுதி ஆட்டத்தில், இந்தத் தொடரில் பெரும் ஃபார்மில் இருக்கும் மக்டா லினெட் (போலந்து) ஏழாம் நிலை வீராங்கனையான ரெபேக்கா மரினோவை எதிர்கொண்டார். முதல் செட்டில் இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு முதல் செட்டானது டை பிரேக்கருக்கு சென்றது. இதில் லினெட் 12-10 என்ற கணக்கில் வென்றார்.
தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் லினெட்டின் ஆதிக்கமே இருந்தது. இந்த செட்டிலும் மக்டா லினெட் 6-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அதேபோல், மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் கேத்தே ஸ்வான் ஜப்பானை சேர்ந்த ஹபினோவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஸ்வான் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார். அதற்கு பதிலடியாக ஹிபினோ இரண்டாவது செட்டை 6-3 என்று கைப்பற்றினார். இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போட்டியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை கேத்தே ஸ்வான் 6-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
முன்னதாக நடந்த கால் இறுதி ஆட்டங்களில் நாடியா போடோ ரோஸ்கா (அர்ஜென்டினா) 1-6, 6-4, 6-2 என்ற கணக்கில் யூஜின் பவுச்சர்ட்னடயும் (கனடா), லிண்டா புருவிர்தோவா (செக் குடியரசு) 6-4, 6-3 என்ற கணக்கில் வார்வரா கிராசேவாவையும் (ரஷியா)வீழ்த்தினார்கள்.
இன்று இரவு 7 மணிக்கு அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு அரை இறுதியில் நாடியா போடோ ரோஸ்காவும்(அர்ஜென்டினா)-லிண்டாவும், (செக்குடியரசு) மோதுகிறார்கள். அதைத்தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது அரை இறுதியில் மக்டா லினெட் ஸ்வானை எதிர்கொள்கிறார்.
மேலும் படிக்க | அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் உலகின் நம்பர் 1 வீராங்கனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ