IPL 2025 Mega Auction: நாள் நெருங்கிவிட்டது... வரும் அக்.31ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் (IPL Retention 2025) பட்டியலை வெளியிட வேண்டும். 6 வீரர்கள் வரை தக்கவைக்கலாம். இருப்பினும் அதனை ஏலத்திற்கு முன்பாகவும் தக்கவைக்கலாம், ஏலத்தில் RTM பயன்படுத்தியும் தக்கவைக்கலாம். அதிகபட்சம் 5 Capped வீரர்களை நீங்கள் தக்கவைக்க இயலும், அதேபோல் அதிகபட்சம் 2 Uncapped வீரர்களை தக்கவைக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) உள்ளிட்ட அனைத்து அணிகளும் தாங்கள் யாரை தக்கவைக்கிறோம், யாரை விடுவிக்கிறோம் என்பதை இப்போதே தீர்மானித்திருக்கும். சரியாக அக். 31ஆம் தேதி தீபாவளி அன்று நமக்கு அது தெரியவந்துவிடும். குறிப்பாக, சிஎஸ்கே ருதுராஜ், ஜடேஜா, பதிரானா, தூபே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரை தக்கவைக்கும் எனலாம். Uncapped வீரராக தோனியை தக்கவைக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் தோனி ஐபிஎல் சீசனில் விளையாட சம்மதம் தெரிவித்துவிட்டாரா இல்லையா என்பதும் இன்னும் உறுதியாக தெரியவில்லை. 


வெளிநாட்டு வீரர்கள் தேவை


இது ஒருபுறம் இருக்க, சென்னை அணி (CSK) 2 வெளிநாட்டு வீரர்களை நிச்சயம் தக்கவைத்துவிடும். இவர்கள் இருவரும் பிளேயிங் லெவனில் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்பதும் உறுதி. அப்படியிருக்க இன்னும் மூன்று - நான்கு வெளிநாட்டு வீரர்கள் சிஎஸ்கேவுக்கு தேவைப்படலாம். அதுவும் பிளேயிங் லெவனில் விளையாடும் வகையிலும், முக்கிய வீரர்களுக்கு பேக்அப்பாகும். அதிலும் குறிப்பாக, சுழற்பந்துவீச்சாளர், ஆல்-ரவுண்டர்களைதான் சிஎஸ்கே விரும்பும். வேகபந்துவீச்சில் கூட புது பந்தில் திறன்பட பந்துவீசுபவர்களை தூக்க சிஎஸ்கே திட்டமிடலாம். 


மேலும் படிக்க | ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 27 வயது விக்கெட் கீப்பர்! யார் தெரியுமா?


அந்த 3 தென்னாப்பிரிக்க வீரர்கள்


அந்த வகையில், இந்த மூன்று தென்னாப்பிரிக்க வீரர்களையும் சிஎஸ்கே ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் நல்ல தொகைக்கு எடுக்க முற்படும் என கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க வீரர்கள் சிஎஸ்கவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். ஆல்பி மார்கல், ஃபாப் டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்நிலையில், சிஎஸ்கே டார்கெட் செய்யும் 3 தென்னாப்பிரிக்க வீரர்கள் (3 South African Players) குறித்து இதில் காணலாம். 


எய்டன் மார்க்ரம் 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்தவர், எய்டன் மார்க்ரம் (Aiden Markram) . அந்த அணிக்கு (Sunrisers Eastern Cape) தென்னாப்பிரிக்காவின் SA20 லீக்கில் கேப்டனாகவும் இருக்கிறார். நடைபெற்ற 2 சீசன்களிலும் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஆனாலும், கடந்த ஐபிஎல் தொடரில் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு குறைவானது. இந்த சூழலில் நிச்சயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவரை தக்கவைக்காது. இவரை எடுத்தால் சிஎஸ்கேவின் மிடில் ஆர்டருக்கு நல்ல வெளிநாட்டு பேட்டரும் கிடைத்துவிடுவார், நல்ல ஆஃப் ஸ்பின்னரும் கிடைத்துவிடுவார். சிஎஸ்கேவுக்கு தற்போது பகுதிநேர ஸ்பின்னர்கள் கிடைப்பது வரம்தான்.


ஜெரால்டு கோட்ஸி


இவர் கடந்தாண்டு மும்பை எடுத்து பல்ப் வாங்கியதே என நீங்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது. ஆனால் சிஎஸ்கேவின் பார்வை இவர் மீது விழுந்தால் நிச்சயம் களத்திலும் விக்கெட்டுகள் வரிசையாக விழும். ஜெரால்டு கோட்ஸி (Gerald Coetzee) SA20 லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் (Joberg Super Kings) அணியில்தான் விளையாடுகிறார். எனவே நிர்வாகத்துடன் இணக்கமும் இருக்கும். இவரை புது பந்திலும் வீச வைக்கலாம், டெத் ஓவர்களிலும் வீச வைக்கலாம் என்பதால் பதிரானாவுக்கு பக்கபலமாக இருப்பார். 


ககிசோ ரபாடா


தென்னாப்பிரிக்காவின் மகாயா ந்தினியை (Makhaya Ntini) சிஎஸ்கே முன்னர் எடுத்தது. அதன்பின்னர் அவரை போன்ற அதிரடி வீரருக்காக காத்திருக்கிறது. லுங்கி இங்கிடி அதனை ஓரளவுக்கு பூர்த்தி செய்தார் என்றாலும் ரபாடா (Kagiso Rabada) போன்ற திறன்மிக்கவர்களை சிஎஸ்கே எடுத்துக்கொள்வது நிச்சயம் நல்ல பலன்களை தரும். எல்லோருக்குமே தெரியும் நல்ல வேகத்தில் போட கூடியவர், எந்த ஓவரில் வேண்டுமானாலும் பந்துபோட வைக்கலாம். பழைய தோல்விகளை சிந்தித்து இவரை தவறவிட்டால் இழப்பு சிஎஸ்கேவுக்குதான்.  


மேலும் படிக்க | CSK: பலமான அணியை உருவாக்க... ஏலத்தில் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்களை சிஎஸ்கே எடுக்கும்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ