Chennai Super Kings Auction Startegies: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் ஐபிஎல் 2025 சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறது. காரணம், மீண்டும் ஒருமுறை அதன் ஆஸ்தான நாயகன் எம்எஸ் தோனி (MS Dhoni) களமிறங்க இருக்கிறார்... ரூ.4 கோடிக்கு Uncapped வீரராக சிஎஸ்கே தோனியை தக்கவைத்திருக்கிறது. கடந்த மெகா ஏலத்தில் ரூ.12 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட நிலையில், தற்போது 8 கோடி ரூபாயை குறைத்து ரசிகர்களின் விருப்பத்திற்காக களம் காண்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எப்போதுமே சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) தோனியை மையமாக வைத்தே இயங்கி இருக்கிறது. கடந்த சீசன் முழுவதும், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டார். அதற்கு முன்,  சிஎஸ்கே அணிக்கு (CSK) தோனியை தவிர யாருமே ஒரு சீசனை முழுவதுமாக தலைமை தாங்கியது கிடையது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தாலும் கோடிக்கணக்கான ரசிகர்கள், கிரிக்கெட் பார்வையாளர்களின் கவனம் முழுவதும் தோனியின் பக்கம்தான் உள்ளது. அந்த வகையில், வரும் 2025 சீசனிலும் தோனியை மையமாக வைத்தே அணி உருவாக்கப்படும் எனலாம்.


சிஎஸ்கே அணிக்கு தேவை என்னென்ன?


தோனி, ருதுராஜ் ஆகியோரை அடுத்து ஜடேஜா, தூபே, பதிரானா என பலரும் எதிர்பார்த்த வீரர்களைதான் சிஎஸ்கே இந்த முறை தக்கவைத்திருக்கிறது. கான்வே, ரச்சின் ரவீந்திரா, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே மெகா ஏலத்திற்கு (IPL 2025 Mega Auction) விடுவித்தாலும் அவர்களில் ஒருவரை நிச்சயம் RTM மூலம் மீண்டும் தக்கவைக்கும் என நம்பலாம்.


மேலும் படிக்க | சிஎஸ்கே டிக் அடித்திருக்கும் 3 இளம் வீரர்கள்... சின்ன அமௌண்டில் பிளேயிங் லெவன் ரெடி


தற்போது தக்கவைக்கப்பட்ட 5 வீரர்களை வைத்து பார்த்தால், ஒரு ஓப்பனிங் பேட்டர், மிடில் ஆர்டர் அதிரடி பேட்டர், ஒரு இந்திய சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர், பின்வரிசையில் ஃபினிஷிங் ரோலில் ஒரு பேட்டர், டெத் ஓவர்களில் தாக்குதல் தொடக்கும் வேகப்பந்துவீச்சாளர் ஆகிய இடங்களை நிரப்பியிருக்கிறது. இதில், ரச்சின் ரவீந்திரா அல்லது கான்வேவை மீண்டும் தக்கவைத்தால் ஓப்பனிங் ஸ்பாட் நிரம்பிவிடும். இவர்களுக்கு பேக்-அப்பாக ஆயுஷ் மாத்ரே போன்ற Uncapped வீரர்களையும் சிஎஸ்கே எடுக்கும்.


நம்பர் 3இல் யாரு...?


சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, அஜிங்கயா ரஹானே ஆகியோர் கலக்கிய நம்பர் 3 ஸ்பாட்டில் சிஎஸ்கே யாரை நிரப்ப காத்திருக்கிறது என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சர்ஃபராஸ் கான், முஷீர் கான், மனீஷ் பாண்டே உள்ளிட்டோரை எடுக்க சிஎஸ்கே முயற்சிக்க வேண்டும். 


மிடில் ஆர்டர் மாணிக்கங்கள்


அதே நேரத்தில் மிடில் ஆர்டரில் ஒரு வெளிநாட்டு வீரரை சிஎஸ்கே எடுக்க நினைக்கும், அதாவது மொயின் அலி ஸ்பாட்டில் ஒருவர் வேண்டும் அல்லவா... கிளென் மேக்ஸ்வெல், கிளென் ஃபிலிப்ஸ், லியம் லிவங்ஸ்டன் உள்ளிட்டோருக்கு சிஎஸ்கே குறிவைக்கும். இவர்கள் மூவரும் அதிரடி பேட்டர்கள் மட்டுமல்லாது சேப்பாக்கத்தில் சிறப்பான ஸ்பின்னராக செயல்படவும் வாய்ப்புள்ளது. மார்கஸ் ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், ரொமாரியோ ஷேப்பேர்ட் போன்றோர் நல்ல விலையில் வந்தால் வைத்துக்கொள்ளலாம்.  


மேலும் படிக்க | ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் விராட் இல்லை, ஆஸி பிளேயர் வரப்போகிறார்..!


அதேபோல், தூபே, ஜடேஜா மற்றும் தோனி இருந்தாலும் இதற்கு இடையே ஒரு இந்திய அதிரடி வீரர் ஒருவரும் சிஎஸ்கேவுக்கு நிச்சயம் தேவை எனலாம். நேஹல் வதேரா, குர்னால் பாண்டியா போன்ற முன்னாள் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) வீரர்களுக்கு சிஎஸ்கே குறிவைக்க வேண்டும். தோனிக்கு பேக்-அப்பாக ராபின் மின்ஸ், கேஎஸ் பரத், போன்றோரையும் எடுக்கலாம். ரிஷப் பண்ட் கிடைப்பது கடினம் என்பதால் இஷான் கிஷன் நல்ல விலையில் கிடைத்தால் சிஎஸ்கே கண்டிப்பாக எடுக்கும். ஒருவேளை அவரை எடுக்கும்பட்சத்தில், ஒன்-டவுன் அல்லது ஓப்பனிங்கில் இறக்கவும் வாய்ப்பிருக்கிறது.


வேகப்பந்துவீச்சு ஆப்ஷன்கள்


வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், அன்சுல் கம்போஜ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஹேசில்வுட், நடராஜன், ஹர்ஷல் பட்டேல், ஆரோன் ஹார்டி உள்ளிட்டவர்களை சிஎஸ்கே குறிவைக்கும். தீக்ஷனாவின் இடத்தில் அல்லா கசன்ஃபர், வக்கார் சலாம்கெயில் உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களை சிஎஸ்கே குறிவைக்கலாம். அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோரையும் வளைத்துப்போட சிஎஸ்கே நினைக்கும். 


அதே நேரத்தில் மேற்கூறிய வீரர்கள் கிடைக்காதபட்சத்தில் கடந்த சீசனில் சிஎஸ்கேவில் இருந்த சமீர் ரிஸ்வி, தீபக் சஹா, முகேஷ் சௌத்ரி, சிமர்ஜித் சிங், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோரை எடுக்கவும் சிஎஸ்கே தயங்காது. சிஎஸ்கே அணி எப்போதுமே மிகப்பெரிய நட்சத்திர வீரர்களை நோக்கி காய் நகர்த்தாது. ஸ்டோக்ஸை மினி ஏலத்தில் எடுத்தால் கூட அவரை வெளியே வைத்துதான் தோனியின் சிஎஸ்கே விளையாடியிருக்கிறது. 


சிஎஸ்கே 55 கோடி ரூபாயை ஏலத்தில் வைத்திருக்கிறது. RTM செய்யும் வீரருக்கு 10 - 15 கோடி ரூபாய் வரை பணத்தை ஒதுக்கியிருக்கும். எனவே, மற்ற இடங்களுக்கு சராசரியான தொகையில் கிடைக்கும் அனுபவம் வாய்ந்த வீரர்களை சிஎஸ்கே கொத்திக் கொத்தி ஏலத்தில் தூக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம். 


மேலும் படிக்க | இந்த 3 வீரர்களை எப்படியாது ஏலத்தில் எடுக்க வேண்டும்! மும்பை அணியின் மெகா பிளான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ