ப்ராவோ கலந்துகொள்ளும் மாரத்தான் போட்டி
பிரபலங்கள் கலந்து கொள்ளும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வுக்காக மாநில அளவிலான தமிழ்நாடு மாரத்தான் போட்டி நடைபெறவிருக்கிறது.
Sportz pro & tamilnadu athletic இணைந்து முதல்முறையாக வரும் ஜூன் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான மாநில அளவிலான மாரத்தான் போட்டியை நடத்தவிருக்கிறது.
இந்தப் போட்டியில் கிரிக்கெட் வீரர்கள் ப்ராவோ, ராபின் சிங் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.மேலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். அதேபோல் வருகின்ற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் கோயம்புத்தூர் மற்றும் திருச்சியிலும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | 2011 ஆம் ஆண்டு இதே நாளில்: சிஎஸ்கே கோப்பை வென்ற சுவாரஸ்ய கதை!
மாநில அளவிலான மாரத்தான் போட்டியை சென்னை கோஸ்டல் ரோட்டரி கிளப் தலைவர் மஞ்சித் சிங்,ஸ்போர்ட்ஸ்ப்ரோ இயக்குனர் சபரி நாயர், நிகழ்ச்சியின் ஜிஆர் சோனாலி ஜெயின் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் இந்த மாரத்தான் போட்டி கொண்டுள்ளது.மேலும் உதவி செயலி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சென்னை கோஸ்டல் ஆகிய அமைப்புகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றிய செய்தியை பரப்புவதற்காகவும் இணைந்துள்ளன.
மேலும் படிக்க | வருங்கால அம்பயர்கள்.. சைமன் டஃபல் கணித்துள்ள இந்திய வீரர்கள் யார் யார்?
மாரத்தான் போட்டியின்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஓவியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.
இந்த மாரத்தான் போட்டி குறித்து ஸ்போர்ட்ஸ் ப்ரோ இயக்குனர் சபரி நாயர் கூறுகையில், “மாரத்தான் மூலம் மக்களிடையே ஒற்றுமை மற்றும் பிணைப்பு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆரோக்கியமான உடற்பயிற்சியை ஊக்குவிப்பதற்காகவும் இதுபோன்ற மாரத்தான் போட்டி புதிய தொடக்கமாக இருக்கும்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR