IPL 2021: ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஐக்கிய அமீரகம் சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
IPL போட்டிகளில் எஞ்சிய ஆட்டங்கள் செப்டம்பர் மாதம் 19 தேதி முதல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும். கடந்த வருடமும் கொரோனா தொற்றால் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றன
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 17ஆம் தேதியிலிருந்து ஐக்கிய அமீரகத்தில் நடக்க உள்ளது. இதற்காக டோனி தலைமையிலான சென்னை அணி இன்று ஐக்கிய அமீரகம் புறப்பட்டது.
2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றன. 29 போட்டிகள் முடிந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. சில வெளிநாட்டு வீரர்கள் தங்கள் ஊருக்கு கிளம்புவதாக அறிவித்து வந்தனர். இந்திய வீரர் அஸ்வினும் தன் குடும்பத்துடன் இருக்கப்போவதாக அறிவித்தார். இதனால் ஐபில் நிர்வாகமே மீதமுள்ள போட்டிகளை நிறுத்தியது.
இன்னிலையில் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும் என்ற கேள்வி இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் 19 தேதி முதல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்தது. கடந்த வருடமும் கொரோனா தொற்றால் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றன.
தற்போது தோனி, ரெய்னா, உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர் மாதிரியான வீரர்கள் தற்போது அமீரகத்திற்கு இன்று புறப்பட்டனர் . அடுத்தடுத்த நாட்களில் அணியின் மற்ற வீரர்களும் அணியினருடன் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. மும்பை இன்டியன்ஸ் அணிக்கு எதிராக வரும் செப்டம்பர் 19-ஆம் தேதியன்று சென்னை அணி மோத உள்ளது.
நேற்று மகேந்திர சிங் தோனி நடிகர் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
Also Read | வீராங்கனைகளின் சீருடை சிக்கலும், அவர்கள் கடந்த வந்த பாதையும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR