புதுடெல்லி: பாலின சமத்துவம் என்பது தற்போதும் கேள்விக்குறியாக இருந்தாலும், பல தசாப்தங்களில் நிலைமை மிகவும் மாறியிருக்கிறது. 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பெண்கள் இன்று அனைத்துத் துறைகளிலும் முதலிடத்தைப் பிடித்து வருகின்றனர்.
கல்வியாக இருந்தாலும் சரி, விளையாட்டுத் துறையாக இருந்தாலும் சரி, பெண்கள் தங்களுடைய திறமையை வீரியத்துடன் வெளிப்படுத்தும் திறமிக்க மங்கைகளாய் மின்னுகின்றனர் பெண்கள்.
ஆனால், சில தசாப்தங்களுக்கு முன்பு வரை விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு இடம் கிடைத்தாலும் கூட, ஆடை தொடர்பாக பல இன்னல்களை எதிர்கொண்ட வீராங்கனைகள் அந்தத் தடைகளையும் தாண்டி வந்துள்ளனர்.
தற்போது டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளில் வீராங்கனைகள் வெற்றிக் கொடி பிடித்து நடை பயில்வதை பார்க்கும் போது மகிழ்ந்தாலும், அவர்கள் கடந்துவந்த முட்பாதைகளை மறக்க முடியாது.
Also Read | சல்மான் கானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மீராபாய் சானு
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும்போது கூட, ஆண்களின் கவனத்தை ஈர்க்காத வண்ணம் பெண்கள் ஆடைகள் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்த நிலையுடன், இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், தடைகளை தகர்க்க வீராங்கனைகள் கடந்து வந்த பாதையின் முரட்டுத்தனம் புரியும்.
1900 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் தான் பெண்கள் முதலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அந்த காலத்து வீராங்கனைகளின் புகைப்படங்களைப் பார்த்தால், எந்த விளையாட்டாக இருந்தாலும் பெண்கள் கால் கணுக்கால் வரை நீண்ட ஆடைகளை அணிந்திருப்பதை காணலாம்.
டென்னிஸ், படகோட்டம், கோல்ஃப், குதிரை சவாரி என சில போட்டிகளில் மட்டுமே பெண்கள் கலந்துக் கொள்ள அனுமதி கிடைத்தது. அண்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொண்ட விளையாட்டு வீரர்கலில் 2 சதவிகிதம் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல, பெண்கள் தங்கள் ஆடைகளை தேர்வு செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதற்குக் காரணம், விளையாட்டு அமைப்பாளர்கள் பெண்கள் உடல்கள் ஆண் விளையாட்டு வீரர்களை திசை திருப்பும் என்று நினைத்தனர்.
அதனால் உடல்களை மறைக்கும் வகையில் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஆடைகள் பெண்கள் வசதியாக விளையாடுவதைத் தடுத்தன.
அந்த சூழ்நிலையில் மாற்றத்துக்கு வித்திட்டவர் பிரெஞ்சு டென்னிஸ் வீராங்கனை சுசேன் லெங்லன் (Suzanne Lenglen). 1919ஆம் ஆண்டு அவர் ஒலிம்பிக்கில் கலந்துக் கொண்ட அவர், போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்திய ஆடையை அணிய மறுத்தார். எனவே அவர் தனது தடகள திறமை மற்றும் டென்னிஸ் பிரபலம் என்பதைத் தாண்டி துணிச்சலான ஆடைகளுக்காகவும் உலக பிரபலமானார்.
1932 வாக்கில், பெண்களின் ஒலிம்பிக் சீருடைகளில் ஓரளவு மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வீராங்கனைகள் அணிந்திருப்பது போன்ற நிலை அப்போதும் ஏற்படவில்லை.
ஆனால், காலப்போக்கில், தங்கள் சீருடைகள் பாலியல் எண்ணத்தைத் தூண்டும் என்ற கருத்தை மறுக்கத் தொடங்கிய விளையாட்டு வீராங்கனைகள், ஒரு கட்டத்தில் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தனர்.
Also Read | ஒலிம்பிக்கில் ஜொலிக்கும் சிங்க பெண்கள் - 3 பதக்கங்கள் வென்று தந்த தங்க மங்கைகள்!
நாங்கள் அணியும் ஆடை எங்கள் விருப்பம் என்ற கருத்து, வீராங்கனைகளின் உடையிலும் எதிரொலித்தது. அது நடைமுறை வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தடகள அரங்கில், குறிப்பாக டென்னிஸில் பெண்கள் அணிந்த ஆடைகளை தெருவிலும் அலுவலகத்திலும் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று கலாச்சார காவலர்கள் கூக்குரலிட்டனர்.
இருந்தாலும், ‘என் ஆடை, என் விருப்பம், என் உரிமை’ என்ற எண்ணம் பெண்களிடையே பரவியது. நீண்ட மற்றும் அடக்கமான ஆடையை அணிவதும் எங்கள் விருப்பமே, மினி ஸ்கர்ட் போன்ற குறுகிய ஆடை அணிவதும் என் விருப்பமே, அதில் உங்கள் எண்ணத்தைத் திணிக்காதீர்கள் என்ற கருத்தை பெண்களும், வீராங்கனைகளும் வலுவாக முன்வைக்கின்றனர்.
தற்போது பெண்கள் தங்களுக்கு வசதியான ஆடைகளை அணியும் உரிமையை எடுத்துக் கொண்டார்கள். அதை சமூகமும் ஏற்றுக் கொள்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஆரம்பத்தில், ஜெர்மன் பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் அணி பிகினி ஆடைகளுக்கு பதிலாக யூனிடார்ட் (unitard) வகை ஆடையை அணிந்தார்கள். அது அவர்களுக்கு வசதியாக இருந்ததால் அணிந்ததாக அந்த வீராங்கனைகள் தெரிவித்தனர்.
Also Read | ஹாக்கி வீராங்கனை வந்தனா மீது சாதி வெறி தாக்குதல்! என்று தீரும் இந்த சாதி மோகம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR