CSK: சிஎஸ்கேவுக்கு அஸ்வின் ஏன் தேவை...? - முக்கிய 3 காரணங்கள்!
Chennai Super Kings: வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அஸ்வினை எடுக்க மூன்று முக்கிய காரணங்களை இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction, Latest News Updates: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ஒரு Uncapped வீரர் உள்பட மொத்தம் 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. ருதுராஜ், ஜடேஜா, பதிரானா, தூபே என நான்கு Capped வீரர்களை தக்கவைத்திருக்கும் நிலையில், தோனியை Uncapped வீரராக சிஎஸ்கே தக்கவைத்திருக்கிறது. மொத்த பர்ஸ் தொகையான ரூ.120 கோடியில் ரூ.65 கோடியை செலவழித்துள்ளது.
ஏலத்தில் Capped வீரரை RTM மூலம் சிஎஸ்கே தக்கவைக்கலாம், கையில் ரூ.55 கோடியும் உள்ளது. எனவே, ரச்சின் ரவீந்திரா, கான்வே ஆகியோரில் ஒருவரை சிஎஸ்கே தக்கவைக்கலாம். வெளிநாட்டு வீரர்கள் ஒருபுறம் இருக்க இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள், வெளிநாட்டு சுழற்பந்துவீச்சாளர்களை அணியில் எடுக்கும் கட்டாயம் சிஎஸ்கேவுக்கு உள்ளது. அதுமட்டுமின்றி பேக்அப்பில் இந்திய ஆல்-ரவுண்டர்கள், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள், வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்களையும் சிஎஸ்கே ஏலத்தில் எடுக்க வேண்டும். தோனியை (MS Dhoni) வெறும் ரூ.4 கோடிக்கு தக்கவைத்திருந்தாலும், ஜடேஜாவுக்கு ரூ.18 கோடி ஒதுக்கியது பெரும் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகிறது.
சிஎஸ்கே குறிவைக்கும் அஸ்வின்
இந்த சூழலில், சிஎஸ்கே அணி (CSK) குறைந்த தொகையில் கிடைக்கும் அனுபவ வீரர்களை அள்ளிப்போடும் தனது பழைய வியூகத்தை மீண்டும் இந்த மெகா ஏலத்தில் கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஷேன் வாட்சன், ரஹானே போன்றோரை எடுத்து எப்படி அணியையும், அவர்களையும் சிஎஸ்கே பலப்படுத்தியதோ அதேபோல் தற்போது சில வீரர்களுக்கு சிஎஸ்கே வலைவிரிக்க வேண்டும். உதாரணத்திற்கு, டேவிட் வார்னர், ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) ஆகியோரை சொல்லலாம். அதிலும் அஸ்வினுக்கு சிஎஸ்கே முடிந்தவரை ஏலத்தில் தூக்க வேண்டும்.
அஸ்வின் 2008ஆம் ஆண்டில் இருந்து சிஎஸ்கேவில் இருந்தாலும், 2009ஆம் ஆண்டில்தான் அறிமுகமானார். தொடர்ந்து 2015ஆம் ஆண்டு வரை சிஎஸ்கேவில்தான் அஸ்வின் விளையாடினார். அதன்பின், 2016, 2017இல் ரைஸ்ஸிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாடினார். 2018இல் அனைவரும் மீண்டும் சிஎஸ்கேவில் இணைந்தபோது அஸ்வினை மட்டும் எடுக்க முயவில்லை. அவர் அடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என வெவ்வேறு அணிகளில் விளையாடிவிட்டார்.
மூன்று முக்கிய காரணங்கள்
தற்போது அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தக்கவைக்கப்படவில்லை. ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வால், சாம்சன், ஹெட்மயர், ஜூரேல், ரியான் பராக், சந்தீப் சர்மா ஆகிய 6 பேரையும் தக்கவைத்ததால் பட்லர், போல்ட், சஹால், அஸ்வின் ஆகியோரை அந்த அணி ஏலத்திற்கு விடுவித்துள்ளது. கைவசம் RTM இல்லாத நிலையில், ராஜஸ்தானால் பெரிய தொகைக்கு இவர்களை எடுக்க முடியாது. அஸ்வின் குறைந்த தொகைக்கு கிடைப்பார் என்றாலும் ராஜஸ்தான் அவரை மீண்டும் எடுத்தால் மற்ற அணிகளும் ரேட்டை ஏற்றவே பார்க்கும்.
இந்த சூழலில்தான் சிஎஸ்கே அஸ்வினை ரூ.4-5 கோடிக்குள் எடுக்கப் பார்க்கும். ஏனென்றால் அஸ்வின் வந்தால் சிஎஸ்கேவுக்கு மூன்று நன்மைகள் கூடவே வரும். நம்பர் 8,9இல் நல்ல ஆல்-ரவுண்டர் கிடைப்பார். டிஎன்பிஎல் தொடரிலேயே பார்த்தோம் பந்துவீச்சு, பேட்டிங்கில் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். சிஎஸ்கே கூட சேப்பாக்கத்தில் மட்டும் சுனில் நரைனை போல் அஸ்வினை ஓப்பனிங்கில் இறக்கி சோதித்து பார்க்கலாம். அஸ்வினிடம் அனுபவமும் இருக்கிறது, சொந்த மண் என்ற கூடுதல் பலமும் இருக்கிறது. இந்த மூன்று முக்கிய காரணங்கள்தான் சிஎஸ்கேவுக்கு அஸ்வின் தேவை என்ற நிலையை ஏற்படுத்துகிறது. அஸ்வினுக்கு சிஎஸ்கேவுக்கு வருவதே நல்லது. அவரது கிரிக்கெட் வாழ்வின் கடைசி தருணங்களை சிஎஸ்கேவில் செலவிட்டால் நிச்சயம் அவருக்கு மகிழ்ச்சியே இருக்கும்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ