SHR vs KKR vs KXPI - ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற போவது யார்?
IPL 2019 தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன!
IPL 2019 தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன!
IPL 2019 தொடரின் 55-வது லீக் ஆட்டம் மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. ப்ளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட சென்னை அணிக்கு இன்றைய போட்டி ஒரு பயிற்சி ஆட்டம் போலவே இருக்கும்.
அதேவேளையில் 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் பெற்று ப்ளா ஆப் சுற்றுக்கு முன்னேற ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
அதாவது ப்ளா ஆப் சுற்றுக்கு முன்னேற காத்திருக்கும் 4-வது அணிகள் தற்போது 12 புள்ளிகளுடன் வரிசையில் காத்திருக்கின்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுவிட்டால் வரிசையில் மூன்றாவது ஆளாக இடம்பிடிக்கும். தற்போது 12 புள்ளிகளுடன்(+0.577) சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி நான்காம் இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணி நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெறும் பட்சத்தில் ஐதராபாத் அணியை பின்னுக்கு தள்ளி நான்காம் இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
ஐதராபாத் - பஞ்சாப் அணிகளுக்கு இடையே இப்படி ஒரு மறைமுக போட்டி இருக்க, இரண்டு அணிகளையும் பின்னுக்கு தள்ளி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தயாராக உள்ளது. அதாவது., சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 56-வது லீக் போட்டி நடைபெறுகிது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். ஒருவேலை இப்போட்டி முடிவு இல்லாமல் முடிந்தாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மூன்று அணிகளுக்கும் இடையேயான போட்டியில் வெற்றி பெற போதவு யார் என இன்றைய போட்டியின் முடிவுக்கு பின்னர் தெரியவரும்.