டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!
IPL 2019 தொடரில் 18-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!
IPL 2019 தொடரில் 18-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!
IPL 2019 தொடரின் 18-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இப்போட்டியில் மோதுகின்றன.
சென்னை அணியை பொருத்தவரையில் பிராவோ-விற்கு ஓய்வு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்காட் குக்கிலைன்ஜ்-க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
IPL 2019 புள்ளிப்பட்டியல் படி இரு அணிகளும் 4 போட்டிகள் விளையாடி 3-ல் வெற்றி, 1-ல் தோல்வி என 6 புள்ளிகள் பெற்றுள்ளது., எனினும் பஞ்சாப் அணி ரன்ரேட் அதிகம் பெற்றிருப்பதால் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பெற்றுள்ளது. அதே வேலையில் சென்னை அணி 4-ஆம் அடத்தை பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி மீண்டும் முதல் இடத்தை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.