Zee Exclusive: விராட் - ரோகித் சண்டை இல்லை, ஆனால்... சேத்தன் சொல்லும் தகவல்!
Chetan Sharma Sting Operation: இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர்களான விராட் - ரோகித் குறித்து அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.
Chetan Sharma Sting Operation: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மாவிடம் ZEE NEWS ஒரு பெரிய ஸ்டிங் ஆபரேஷன் செய்தது. இந்திய அணியில் ஃபிட்னஸை போலியாக நிரூபிக்க ஊக்கமருந்து ஊசி பயன்படுத்தப்பட்டது; சவுரவ் கங்குலி - விராட் கோலிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கான உண்மையான காரணம்; அணியில் இருந்து வீரர்களை நீக்கியதற்கு யார் காரணம் என்பது உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டார்.
இவை, இதற்கு முன்னர் பொதுவெளியில் மறைக்கப்பட்டு, உண்மை நிலவரம் தெரியாமல் இருந்தது. ஜீ மீடியாவின் உளவு கேமராவில் பதிவான சேத்தன் சர்மாவின் கருத்துகள், பிசிசிஐ மற்றும் ஐசிசியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தலாம். இதில், விராட் கோலி - ரோகித் சர்மா ஆகியோருக்கு இடையே நிலவும் உறவு குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.
அதில்,"கங்குலி, ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக இல்லை. ஆனால் அவர் விராட்டை விரும்பவே இல்லை. நீங்கள் அதை இப்படியும் வைத்துக்கொள்ளலாம். விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே சண்டை இல்லை. ஆனால் ஈகோ இருக்கிறது. இருவரும் பெரிய திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்கள். அதாவது, அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திரா போன்று வைத்துக்கொள்ளலாம். இந்திய அணியில் இரண்டு குழுக்கள் உள்ளன. விராட் கோலி ஒரு குழுவுக்கும், ரோஹித் சர்மா ஒரு குழுவுக்கும் தலைமையாக இருக்கின்றனர்." இவ்வாறு சேத்தன் சர்மா கூறியிருந்தார்.
மேலும், இந்திய அணியில் வீரர்கள் தாங்கள் நீக்கப்படாமல் இருக்க என்னென்ன காரியங்களை கையிலெடுக்கிறார்கள், வீரர்களின் உடற்தகுதியை நிரூபிக்க ஊக்கமருந்து ஊசியை பயன்படுத்தவது குறித்தும் அவர் பேசியுள்ளார். இதில், பும்ராவின் உடற்தகுதி குறித்தும், அவர் ஏன் ஊக்கமருந்து ஊசியை பயன்படுத்தவில்லை என்பது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ