Chetan Sharma Sting Operation: Zee Media நடத்திய பிரத்யேக மறைமுக ஆபரேஷனில், இந்திய ஆடவர் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, இந்திய அணியில் நடந்த அத்துமீறல்கள் குறித்து பேசியது தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக, பெரும் சர்ச்சையை உருவாக்கிய கங்குலி - விராட் கோலி பிரச்னை குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.
விராட் அன்று பேசியது என்ன?
அதாவது, 2021ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்துதான் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது, நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது,"கடந்த 8ஆம் தேதிதான் (அதாவது 2021, டிசம்பர் 8), டெஸ்ட் தொடருக்கான தேர்வு கூட்டத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாக என்னை அணி தேர்வுக்குழுவினர் தொடர்பு கொண்டனர்.
மேலும் டி20 கேப்டன் பதவியை அறிவித்ததில் இருந்து கடந்த 8ஆம் தேதிவரை, என்னுடன் எந்த முன் தகவல் தொடர்பும் இல்லை. நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்ட டெஸ்ட் அணியைப் பற்றி தலைமை தேர்வாளர் என்னுடன் விவாதித்தார். வீடியோ கான்பரேன்சிங் அழைப்பை முடிப்பதற்கு முன், ஐந்து தேர்வாளர்கள் நான் ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க மாட்டேன் என்று முடிவு செய்ததாக என்னிடம் கூறினர். அதற்கு நான், 'சரி சரி' என்று பதிலளித்தேன். அதற்கு பின்னர் மற்றொரு சந்தர்பத்தில், தேர்வுக்குழுவின் வீடியோ கான்பரேன்சிங்கில், நாங்கள் அதைப் பற்றி சுருக்கமாக பேசினோம். அதுதான் நடந்தது. அதற்கு முன் எந்த தகவல் தொடர்பும் இல்லை" என தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | ZEE Exclusive: உளவு கேமராவால் கசிந்த ரகசியங்கள்... கிழியும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முகத்திரை!
இந்நிலையில், விராட் கோலி கூறியதில் வேறு விதமாக தற்போது சேத்தன் சர்மா தகவல் அளித்துள்ளார். உளவு கேமாராவில் பதிவானவை, சுருக்கமாக:
சேத்தன் சர்மா: "வீடியோ கான்ஃபரன்ஸில், சௌரவ் கங்குலி சொன்னார் விராட் கோலியை பார்த்து,"ஒருமுறை யோசியுங்கள்...' என்று. விராட் கேட்டிருக்க மாட்டார்... அங்கு ஒருவர் அல்ல, ஒன்பது பேர் உட்கார்ந்திருந்தார்கள்... அத்தனை பேரும் அங்கிருந்தார்கள்... நானும் இருந்தேன். எல்லா தேர்வாளர்களும் இருந்தார்கள். வாரியத்தின் உறுப்பினர்கள் எல்லாம் அங்கிருந்தார்கள். ஒன்று விராட் கேட்டிருக்க மாட்டார் அல்லது விராட் கேட்டிருக்க வேண்டும்.
விராட் பொய் சொன்னார்...
ஆனால், அது குறித்து தெரியவில்லை. விராட்டுக்கு மட்டுமே தெரியும், கங்குலி சொன்னதை அவர் கேட்டாரா என்று. ஆனால், விராட் ஏன் கங்குலி குறித்து அப்படி சொன்னார்?. கேப்டன் பொறுப்பில் இருப்பவர் தென்னாப்பிரிக்காவுக்கு விளையாடப்போகிறார்... பத்திரிகையாளர் சந்திப்பு இந்திய அணியைப் பற்றியது... இந்த பேச்சை அங்கே கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை. இப்போது இந்த நோக்கத்தை சொல்லலாம்... அவரை கேப்டன் பதவியில் இருந்து இறக்க பேச்சு இருந்தது உண்மைதான். 8, 9 பேர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது... கங்குலி சொன்னார், விராட் பொய் சொல்கிறார் என்று. ஏன் விராட் பொய் சொல்ல வேண்டும். இன்று வரை அது யாருக்கும் தெரியாது... இது அவருடைய தனிப்பட்ட விஷயம்... அதில் சர்ச்சை ஏற்பட்டது... வாரியம் வெர்சஸ் வீரர் கதைதான்"
Zee News पर सबसे बड़ा खुलासा, खुफिया कैमरे पर खुले BCCI के राज #GameOver @preetiddahiya @DChaurasia2312 pic.twitter.com/D3Mf3YdC6x
— Zee News (@ZeeNews) February 14, 2023
கங்குலியை மாட்டிவிட எண்ணினார், விராட்
2021-22, இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி பேசியிருந்தார். அப்போது, அவர்,'கேப்டன் பதவியில் இருந்து தன்னை விலக்குவதாக பிசிசிஐ பொதுவெளியில் அறிவிப்பதற்கு, 1.30 மணி நேரத்திற்கு முன்னர்தான் தனக்கு தகவல் கூறப்பட்டது' என்றார். அவர் அவ்வாறு கூறியது தேவையற்ற ஒன்று. அவர் கங்குலியை மாட்டிவிட எண்ணினார். அதனால்தான் அவர் அவ்வாறு செய்தார்.
'கங்குலிக்கு விராட்டை பிடிக்கவில்லை'
பிசிசிஐ தலைவரான கங்குலியால்தான், தான் கேப்டன் பதவியை இழந்ததாக விராட் கோலி கருதினார். அணி தேர்வுக்குழுவின் வீடியோ கான்ஃபரன்ஸில் 9 பேர் இருந்தார்கள். அப்போதுதான், கங்குலி, ஒருமுறை யோசித்துப் பாருங்கள்' என்று கங்குலி சொன்னார். கோலி அதைக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன், நான் மற்றும் மற்ற அனைத்து தேர்வாளர்கள், பிசிசிஐ அதிகாரிகள் உட்பட 9 பேர் அங்கு இருந்தோம். கோலி கங்குலி கூறியதை கேட்காமலும் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
இந்திய அணியில் இரண்டு குழுக்கள்
கங்குலி, ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக இல்லை, ஆனால் அவர் விராட்டை விரும்பவே இல்லை. நீங்கள் இதை இப்படியும் வைத்துக்கொள்ளலாம். விராட் கோலிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே சண்டை இல்லை. ஆனால் ஈகோ இருக்கிறது. இருவரும் பெரிய திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்கள். அதாவது, அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திரா போன்று வைத்துக்கொள்ளலாம். இந்திய அணியில் இரண்டு குழுக்கள் உள்ளன. விராட் கோலி ஒரு குழுவுக்கும், ரோஹித் சர்மா ஒரு குழுவுக்கும் தலைமையாக இருக்கின்றனர்." இவ்வாறு சேத்தன் சர்மா கூறியிருந்தார்.
வெடிக்கும் பூகம்பம்
கங்குலி பின்னர் பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டாலும், கங்குலி - விராட் கோலி ஆகியோருக்கு இடையேயான சர்ச்சை பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது அதுகுறித்து சேத்தன் சர்மா தகவல் அளித்துள்ளார். இதற்கு விராட் தரப்பிலோ, கங்குலி தரப்பிலோ விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ஊக்கமருந்து ஊசி பயன்பாடு, கேப்டன்கள் ரோஹித் சர்மா - ஹர்திக் பாண்டியா ஆகியோர் குறித்த அனைத்து தகவல்களையும் சேத்தன் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ