4வது டெஸ்டில் களமிறங்கும் கிறிஸ் வோக்ஸ்! இந்திய அணிக்கு பின்னடைவா?
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று தெரியவந்துள்ளது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். கூடுதல் விக்கெட் கீப்பராக சம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், இருப்பினும் ஜானி பெர்ஸ்டோவே 4வது டெஸ்டில் கீப்பராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

கிறிஸ் வோக்ஸ் பிசிஏ வின் சிறந்த வீரருக்கான விருதை 2020ல் பெற்றார். ஆனாலும் கடந்த வருடம் ஆகஸ்ட்ல் இருந்து தற்போது வரை இங்கிலாந்து அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாட வில்லை. இந்தியாவுக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான தேர்வில் காயம் காரணமாக மருத்துவமனையில் இருந்ததால் பங்கேற்க முடியாமல் போனது. தற்போது ஜோஸ் பட்லர் அணியில் இருந்து விலகி உள்ளதால் ஓல்லி போப் மிடில் ஆர்டரில் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.
லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம், அடுத்த போட்டியில் இந்திய அணி மிகவும் பலமாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணிக்கு திரும்புவது கூடுதல் பலம் சேர்க்கிறது. உள்ளூர் போட்டிகளில் மிகவும் அற்புதமாக பந்து வீசி வருகிறார், மேலும் மிடில் ஆர்டரில் அவரது பேட்டிங் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்க உள்ளது. காயத்தில் உள்ள மார்க்வுட்ம் தற்போது சரியாகி வருகிறார் என்று கூறினார்.
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜொனாதன் பெயர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ரோரி பர்ன்ஸ், சாம் கர்ரன், ஹசீப் ஹமீட், டான் லாரன்ஸ், டேவிட் மலான், கிரேக் ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe