காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கம் வென்றார்
காமன்வெல்த் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கம் வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை, வீரர்கள் கலந்துக் கொண்டனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பைனல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அதேபோல ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார் வெண்கலம் வென்றார்.
டெல்லியில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரட்டையர் பிரிவில் ஹீனா சித்து தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.