ராஜஸ்தான் ராயல்ஸின் கோப்பை கனவை கலைக்குமா டெல்லி அணி?
IPL 2019 தொடரின் 40-வது லீக் ஆட்டம் இன்று ஜெய்பூர் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.
IPL 2019 தொடரின் 40-வது லீக் ஆட்டம் இன்று ஜெய்பூர் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.
IPL 2019 தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் அதே அணியினை தொடர ராஜஸ்தான் ராயல்ஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதேவேளையில் ரியான் பாராக்கிற்கு வாய்ப்புகளும் பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது.
அதேப்போல் டெல்லி அணியும் தங்களது வெற்றி அணியுடன் போட்டியை எதிர்க்கொள்ள தயாராகியுள்ளது. டெல்லி அணியின் ரிஷாப் பன்ட் மற்றும் பிரித்திவி ஷா நம்பிக்கைகுறிய பேட்ஸ்மேன்கள் என்ற போதிலும், கடந்த சில போட்டிகளாக தங்களது முழு திறமையினை அவர்கள் வெளிக்காட்ட வில்லை என்றே தெரிகிறது. எனவே இவ்விருவரின் பேட்டிங்க் ஆர்டர் மாற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு தொடரின் லீக் ஆட்டத்தின் பகுதி அளவை கடந்த நிலையில் இதுவரையிலும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதவில்லை. இன்று நடைப்பெறும் போட்டியிலும் வரும் 53-வது லீக் ஆட்டத்திலுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதவுள்ளது. எனவும், இரு அணிகளுக்கும் இடையேயான வெற்றி கணிப்பு இன்றைய ஆட்டத்தை பொருத்தே கணிக்க இயலும்.
புள்ளி பட்டியலை பொருத்தவரையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 6 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளது.