உணவு சுதந்திரத்தில் தலையிட BCCI-க்கு உரிமை இல்லை.. வலுக்கும் எதிர்ப்பு
இந்திய அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உண்ணக்கூடாது என BCCI-யின் புதிய உத்தரவை அடுத்து, தனிநபர் உணவு சுதந்திரத்தில் தலையிட BCCI-க்கு உரிமை இல்லை என சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
கான்பூரில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இன்று (வியாழக்கிழமை) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ - BCCI) புதிய சர்ச்சையில் இறங்கியுள்ளது. பல ஊடக அறிக்கைகளின்படி, இந்திய கிரிக்கெட் வாரியம் டீம் இந்தியாவின் புதிய உணவு முறைகளில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை எந்த வடிவத்திலும் சாப்பிடக்கூடாது என தடை விதித்துள்ளது. ஹலால் முறையில் இறைச்சியை மாத்திரம் உட்கொள்ளுமாறு வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உண்ணக்கூடாது என BCCI-யின் புதிய உத்தரவை அடுத்து, தனிநபர் உணவு சுதந்திரத்தில் தலையிட BCCI-க்கு உரிமை இல்லை என சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
"இந்திய கிரிக்கெட் அணியின் புதிய உணவுத் திட்டத்தின்படி, வீரர்கள் தங்களை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்வதற்காக, எந்த வகையிலும் பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சியை சாப்பிட அனுமதிக்கப்படாது" என்று ஸ்போர்ட்ஸ் டாக் செய்தி வெளியிட்டுள்ளது.
ALSO READ | நாட்டை விட ஐபிஎல்லுக்கு வீரர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள்... கபில்தேவ் ஓபன் டாக்!
"யாராவது இறைச்சி சாப்பிட விரும்பினால், அது ஹலால் வடிவத்தில் மட்டுமே இருக்க வேண்டும், வீரர்கள் வேறு எந்த இறைச்சியையும் சாப்பிட முடியாது," என்றும் ஸ்போர்ட்ஸ் டாக் மேலும் தெரிவித்துள்ளது.
தனி நபர் உணவு சுதந்திரத்திலும் மற்றும் ஒரு சமூகத்தின் உணர்வுகளையும் புண்படுத்துவதாக கூறி, ஹலால் தவிர அனைத்து வகையான இறைச்சியையும் தடை செய்யும் பிசிசிஐயின் முடிவால் ஒரு பகுதி மக்கள் கோபமடைந்துள்ளனர். மறுபுறம், முஸ்லிம்கள் ஹலால் இறைச்சியை விரும்புகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு சமூக ஊடகங்கள் கண்டனம் எழுந்துள்ளது. ஆனால் பிசிசிஐ தரப்பில் இருந்து இந்த விவகாரம் குறித்து இன்னும் எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை.
இதற்கிடையில், கான்பூரில் நடக்கும் முதல் டெஸ்டில் கேன் வில்லியம்சனின் நியூசிலாந்துடன் களமிறங்க இந்திய அணி தயாராகி வருகிறது. வழக்கமான கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, அவர் இல்லாத நேரத்தில் அஜிங்க்யா ரஹானே அணியை வழிநடத்துவார்.
ALSO READ | இந்திய அணிக்கு பின்னடைவு: நியூசிலாந்து தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்
செவ்வாயன்று, காயம் காரணமாக KL ராகுல் முதல் டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவை தேர்வுக்குழு நியமித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR