கோலியை நெருங்கும் குக்: ஐசிசி ரேங்கிங் பார்க்க!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலஸ்டெய்ர் குக் இரட்டை சதம் அடித்ததன் மூலம் ஐசிசி தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
ஐசிசி மூலம் வெளியிடப்பட்ட பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் குக் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்,
முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 6வது இடத்தை பெற்றுள்ளதால் தற்போது 5வது இடத்தில் இருக்கும் கொஹ்லினை நெருங்கியுள்ளார்.
எனினும் தற்போது, ஐ.சி.சி தரவரிசையில் அணைத்து பிரிவுகளிலும் முதல் 5 இடங்களில் இடம்பெறும் ஒரே பேட்ஸ்மேன் இந்திய கேப்டன் கொஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.
ரேங்க் | பெயர் | அணி | புள்ளி | சராசரி |
---|---|---|---|---|
1 |
ஸ்மித் | ஆசி | 941 | 61.05 |
2 | ஜொ ரூட் | இங் | 905 | 54.07 |
3 | கேன் வில்லியம்சன் | நியூ | 880 | 51.16 |
4 | சி. பூஜாரா | இந்தியா | 876 | 52.65 |
5 | விராத் கோலி | இந்தியா | 806 | 49.55 |
6 | அலஸ்டெய்ர் குக் | இங் | 798 | 46.86 |