கிரிக்கெட் வீரர் மனைவியை தாக்கிய போலீஸ் அதிகாரி!
இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபா மீது போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபா மீது போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவர் ஜடேஜா. குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் இவரின் மனைவி ரிவபா காரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் முன்பு சென்று கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அகிர் பைக் மீது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் ஜடேஜா மனைவி ரிவபா காரை விட்டு இறங்கினார்.
அப்போது கோபமடைந்த அந்த போலீஸ் கான்ஸ்டபிள், ஜடேஜா மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் ஜடேஜாவின் மனைவி காயமடைந்தார்.
இதுகுறித்து விவரம் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து ஜடேஜா மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜடேஜா மனைவியை தாக்கிய போலீஸ் கான்ஸ்டபிள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.