CPL 2020 இறுதிப்போட்டி TKR vs SLZ: 4வது முறையாக பட்டத்தை வென்ற டிரிபாகோ நைட் ரைடர்ஸ்
பிரீத்தி ஜிந்தாவின் அணியை தோற்கடித்து ஷாருக்கானின் அணி சாம்பியன் ஆனது. டிரிபாகோ நைட் ரைடர்ஸ் நான்காவது முறையாக பட்டத்தை வென்றது
CPL 2020 Final Match: கரீபியன் பிரீமியர் லீக் (Caribbean Premier League) இறுதிப் போட்டி வியாழக்கிழமை (செப்டம்பர் 10) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டிரிபாகோ நைட் ரைடர்ஸ் செயின்ட் லூசியா அணியை தோற்கடித்து நான்காவது முறையாக பட்டத்தை வென்றது. இறுதி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே 2015, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளிலும் சாம்பியன் படத்தை தட்டி சென்றது.
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் டிரிபாகோ நைட் ரைடர்ஸின் (Trinbago Knight Riders) உரிமையாளர். ப்ரீத்தி ஜிந்தா செயிண்ட் லூசியாவின் (St Lucia Zouks) எஜமானி. இந்த போட்டியில், செயிண்ட் லூசியா அணி நைட் ரைடர்ஸுக்கு 155 ரன்கள் என்ற இலக்கை கொடுத்தது.
ALSO READ |
WATCH: சிக்ஸர் அடித்து விளாசும் தோனி.... CSK வெளியிட்ட WOW வீடியோ..!
IPL 2020: ‘IPL CUP என்னவோ CSK-வுக்கு தான்’ அடித்துக் கூறுகிறார் Shane Watson!!
நைட் ரைடர்ஸ் 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நீயில் லெண்டல் சிம்மன்ஸ் (Lendl Simmons) அதிக ரன்கள் எடுத்துள்ளார். சிம்மன்ஸ் 49 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 84 ரன்கள் எடுத்தார்.
பிராவோ (Darren Bravo) 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அவர் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்சர்களை அடித்தார். இந்த போட்டியில் நைட் ரைடர்ஸ் ஒரு போட்டியில் கூட தோற்றதில்லை. மொத்தம் 12 போட்டிகளிலும் வென்றது.