IPL 2020: ‘IPL CUP என்னவோ CSK-வுக்கு தான்’ அடித்துக் கூறுகிறார் Shane Watson!!

CSK-வில் அனுபவமிக்க மற்றும் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களின் பலத்தின் அடிப்படையில் IPL 2020-ஐ வெல்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் CSK –க்கு மிகவும் பிரகாசமாக உள்ளன என ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 11, 2020, 12:25 AM IST
  • IPL 2020-ஐ வெல்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் CSK –க்கு மிகவும் பிரகாசமாக உள்ளன – ஷேன் வாட்சன்.
  • சில வாரங்களுக்கு முன்பு சென்னை அணியின் 13 உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
  • CSK அணி தனிமைப்படுத்தலில் சில நாட்கள் இருக்க வேண்டியிருந்தது.
IPL 2020: ‘IPL CUP என்னவோ CSK-வுக்கு தான்’ அடித்துக் கூறுகிறார் Shane Watson!! title=

துபாய்: IPL 2020 தொடங்குவதற்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் சிரமங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. சுரேஷ் ரெய்னா (Suresh Raina), ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் அணியில் ஆட முடியாத நிலையில், அணியின் 13 உறுப்பினர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், அணியில் 13 உறுப்பினர்களுக்கு COVID-19 தொற்று ஏற்பட்டதால், பயிற்சி மற்றும் பிற ஏற்பாடுகள் தாமதமாக நடந்தாலும், CSK-வில் அனுபவமிக்க மற்றும் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களின் பலத்தின் அடிப்படையில் IPL 2020-ஐ வெல்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் CSK –க்கு மிகவும் பிரகாசமாக உள்ளன என ஷேன் வாட்சன் (Shane Watson) கூறியுள்ளார்.

வாட்சன் கூறுகையில், 'ஒரு அனுபவமிக்க அணியாக இருப்பது மிகவும் நல்ல விஷயமாகும். எங்கள் வீரர்களால் முதல் போட்டியில் இருந்தே அழுத்தமான சூழ்நிலைகளில் தங்கள் திறமையைக் காண்பித்து அதில் வெற்றி பெற முடியும். எங்கள் அணியின் திறமை வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் இந்த சீசனில் வெற்றி பெற எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். எப்போதும் போல நாங்கள் எங்கள் வலுவான இடங்களில் கவனத்தை செலுத்துவோம்.” என்றார்.

ALSO READ: IPL 2020: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானத்தில் 200 ரன்கள் அடிக்க முடியுமா?

கடந்த சீசனில் தான் சுமாரான ஃபார்மில் இருந்தபோது தனக்கு ஆதரவாக இருந்து உதவிய சென்னையின் அணி நிர்வாகத்தை வாட்சன் பாராட்டினார்.

மேலும், '2018 எனக்கு ஒரு நல்ல சீசனாக இருந்தது. நான் இறுதிப் போட்டியைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. ஆனால் கடந்த ஆண்டும் CSK என்னை முழுமையாக ஆதரித்தது. நான் விரைவில் ஒரு நல்ல இன்னிங்ஸை விளையாடுவேன் என்ற நம்பிக்கையில் அவர்கள் என்னை ஆதரித்தார்கள். உலகத்தரம் வாய்ந்த தலைமை மட்டுமே இந்த வழியில் நம்பிக்கையை நிலைநிறுத்துகிறது.’ என்றார் வாடன்.

செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் போட்டிகளுக்கு சில வாரங்களுக்கு முன்பு சென்னை அணியின் 13 உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் இரண்டு வீரர்களும் அடங்குவர். இதன் காரணமாக CSK அணி தனிமைப்படுத்தலில் சில நாட்கள் இருக்க வேண்டியிருந்தது. அதன் பிறகுதான் CSK அணி பயிற்சி செய்யத் தொடங்கியது.

இருப்பினும் வழக்கத்தைப் போலவே இந்த ஆண்டும் CSK அணி, UAE-ல் நடக்கும் IPL 2020-ல் அதிரடியாக களமிறங்கி பட்டையைக் கிளப்பி விசில் போட வைக்கும் என ஷேன் வாட்சனைப் போலவே CSK ரசிகர்களும் நம்புகிறார்கள். 

ALSO READ: IPL 2020: கொரோனாவை தோற்கடித்து மைதானத்திற்கு திரும்பினார் CSK இன் தீபக் சாஹர்

Trending News