Dhoni-ன் பிறந்தநாளுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு சிக்ஸர் வாழ்த்து
தோனியின் பிறந்த்நாளுக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா....
ஆஸ்திரேலிய மண்ணில் எம்.எஸ்.தோனி அடித்த சிக்ஸர்கள் தொடர்பான வீடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பகிர்ந்துள்ளது. தோனியின் 40 வது பிறந்தநாளில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் 40வது பிறந்தநாள் இன்று. கூல் கேப்டன் என்று அனைவராலும் பாராட்டப்படும் தோனியின் பிறந்த்நாளுக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் தோனிக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது.
ஓய்வுபெற்று கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்தும், தோனி கிரிக்கெட்டில் முதல் ஆறு வெற்றியாளர்களில் ஒருவராக இருக்கிறார். 40 வயதான இவர் டெஸ்ட் போட்டிகளில் 78, ஒருநாள் போட்டிகளில் 229, டி 20 போட்டிகளில் 52 சிக்ஸர்களும் எடுத்துள்ளார். 2012 காமன்வெல்த் வங்கி தொடரில் தோனி எடுத்த அதிரடி சிக்ஸர் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் சிறப்பம்சமாக அமைந்தது.
கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து ஐ.சி.சி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான். அவரது தலைமையின் கீழ், இந்திய அணி, 2007 ஐசிசி உலக Twenty20, 2010 மற்றும் 2016 ஆசிய கோப்பை, 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் (120) செய்த விக்கெட் கீப்பர் தோனி தான். ஒருநாள் போட்டிகளில் 300 கேட்சுகளை எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பரும் தோனியே… இந்த மைல்கல்லை எட்டிய உலகின் நான்காவது விக்கெட் கீப்பரும் தோனி என்பது அவரின் கிரீடத்தில் ஒரு மயிலிறகு என்று சொல்லலாம்.
டி 20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக அதிக பேரை ஆட்டமிழக்கச் செய்தவர் (87), டி 20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக அதிக கேட்சுகளையும் (54) பதிவு செய்தவர் தோனி.
எம்.எஸ். தோனி தனது டெஸ்ட் வாழ்க்கையில் 294 முறை ஆட்டமிழந்து, இந்திய விக்கெட் கீப்பர்களின் ஆட்டமிழப்பு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
Also Read | MS Dhoni Birthday: என்றும் தோள் கொடுக்கும் தோழன் நீ - தோனி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR