இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறு எந்த விளையாட்டுக்கும் இல்லை. இந்திய அணியின் வீரர்களை ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறார்கள்.
ஒரு சில வீர்ரகளின் மீது ரசிகர்களின் பாசமும் நேசமும் மிகவும் அதிகமாக இருக்கிறது. அப்படி ரசிகர்களின் ஏகோபித்த பாசத்துக்கு சொந்தக்காரர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ். தோனி.
இந்திய கிரிக்கெட்டின் முக்கிய புள்ளிகளில் ஒருவர், சென்னையின் செல்லப்பிள்ளை, ‘கேப்டன் கூல்’, தல தோனி (Thala Dhoni), கேப்டன் தோனி, பல வெற்றிகளைப் பார்த்தவர், பல இதயங்களைக் கொள்ளைக் கொண்டவர், இன்னும் பல புகழாரங்களின் சொந்தக்காரர் மாஹி என்று செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி (MSD). இன்று பிறந்த நாள் காணும் தோனிக்கு உலகம் முழுவதிலிருந்து அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தோனியிடம் இருக்கும் பல நல்ல பண்புகளில், நட்பிற்கு ஒரு சிறப்பிடம் உள்ளது. நண்பர்களுக்காக எதையும் செய்யும் சிலரில் அவரும் ஒருவர். அவரே எதிர்பார்க்காத அளவிற்கு அவரது வாழ்க்கை மாறியபோதும், அவரது நண்பர்களுடனான அவரது நட்பு மாறவில்லை. இன்றும் தன் நண்பர்களுக்கு பழைய ‘மாஹி’-யாகவே அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
ALSO READ: Video: தகதகவென எரித்த தோனியின் புகைப்படம்; ரசிகர் அளித்த பரிவு
அவருடைய நண்பர் கூட்டம் மிகப் பெரியது என்றாலும், சோடு மற்றும் சிட்டு அவரது மிகப் பிரபலமான இரு நண்பர்கள் ஆவர்.
சிட்டு பள்ளி நாட்களிலிருந்தே அவருடன் இருக்கும் நண்பர். தான் கிரிக்கெட் (Cricket) விளையாட துவங்கியதிலிருந்து தற்போது தான் உள்ள இடம் வரை, அனைத்தையும் தன் கண்ணால் பார்த்தவர் சிட்டு என தோனியே பலமுறை கூறியுள்ளார். தோனியின் வாழ்வின் அனைத்து ஏற்றத் தாழ்வுகளிலும் சிட்டு அவருடன் இருந்துள்ளார். வெற்றிகளின் போது அவரை கட்டி அணைக்கும் நண்பனாகவும், தோல்விகளின் போது அவரைத் தாங்கி நிற்கும் தூணாகவும் சிட்டு இருந்திருக்கிறார்.
தோனி வாழ்க்கையின் மற்றொரு முக்கியமான நபர் சோடு பைய்யா. தோனி இன்று உலக பணக்காரர்களின் வரிசையில் இருக்கலாம். ஆனால் அவருக்கான முதல் ஸ்பான்ச்ரை பெற்றுத் தந்தவர் சோட்டு பைய்யா. தோனிக்கு பைக்குகளின் மீது இருக்கும் காதலைப் புரிந்துகொண்டு, சோடு பைய்யா தனது பைக்கை அவருக்கு கொடுத்தார்.
உலகத்தின் பார்வைக்கு மௌனமாக, அமைதியாக இருக்கும் தோனி, தன் சொந்த ஊரான ராஞ்சிக்கு (Ranchi) சென்று தனது நண்பர்களைக் கண்டுவிட்டால் முற்றிலுமாக மாறி விடுவார். நண்பர்களுக்காக எப்போதும் எதையும் செய்யத் தயாராக இருக்கும் தோனி நட்புக்கு மிக அதிக அளவு மரியாதை அளிப்பவர்.
தன் நண்பர்களின் குடும்ப விழாக்களில் பங்கெடுக்க அவர் எப்போதும் தவறுவதில்லை. மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ள நிலையிலும் நட்பின் இலக்கணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புத தோழன் - நம் தோனி.
ALSO READ: MS Dhoni: நண்பரின் உயிர் காக்க ஹெலிகாப்டரை அனுப்பினார் தோனி, உயிர் பிழைத்தாரா நண்பர்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR