உலக கோப்பை 2023 பிட்ச்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை நடைபெற்ற நிலையில், அந்த தொடருக்கான மைதான தேர்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தூர், மொஹாலி, ராஜ்கோட் மற்றும் நாக்பூர் போன்ற மைதானங்களில் ஒரு போட்டி கூட நடக்கவில்லை. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மட்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படுவது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பினர். 


வைட் பால்


வங்கதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடிக்க ஒரு ரன் தேவைப்பட்டபோது, அந்த அணியின் பந்துவீச்சாளர் நசூம் அகமது வைடு வீசினார். ஆனால் இதனை வைடு என கள நடுவர் கெட்டில்பரோ அறிவிக்கவில்லை. ஏனென்றால் இந்திய அணியின் வெற்றிக்கும் ஒரு ரன் தேவைப்பட்டது, விராட் கோலி சதமடிக்கவும் ஒரு ரன் தேவைப்பட்டது. அப்போது அம்பயர் வைடு கொடுத்திருந்தால் விராட் கோலி சதமடித்திருக்க முடியாது.  இதனால் அம்பயர் முடிவு மீது பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது.


மேலும் படிக்க | ரோஹித்துக்கு ஜோடி இவரே... ஆனால் அவரிடம் பெருசா எதிர்பாக்காதீங்க - கம்பீர் சொல்லும் விஷயம் என்ன?


ஆடுகளம் அமைப்பு மாற்றம்


ஐசிசி உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை இந்திய அணி வான்கடே மைதானத்தில் விளையாடியது. அந்த போட்டி நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, போட்டி நடக்கும் பிட்ச் மாற்றப்பட்டது. இந்திய அணிக்கு சாதகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


கோலி vs நவீன்


ஐபிஎல் போட்டியில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணிக்காக விளையாடினார். அப்போது விராட் கோலியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நவீனுக்கு ஆதரவாக கவுதம் காம்பீரும் விராட் கோலியுடன் சண்டைபோட்டார். இருப்பினும் உலக கோப்பையின்போது இருவரும் பரஸ்பரம் அன்பை பறிமாறிக் கொண்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.  


தோனி போட்ட பிளான்


ஐபிஎல் போட்டியில் மதீஷ பத்திரனா பந்துவீசுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் சில நிமிடங்கள் வேண்டுமென்றே களத்தில் தாமதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, பத்திரான பெவிலியனுக்கு சென்றுவிட்டு திரும்பிய உடன், அவரை பந்துவீச அழைத்தார் தோனி. ஆனால் பத்திரனா குறிப்பிட்ட சில நிமிடங்கள் களத்தில் இருந்தபிறகே பந்துவீச அனுமதிக்க முடியும் என நடுவர்கள் கூறியதால் இந்த யுக்தியை கையாண்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.


ஷஃபாலி வர்மா அவுட்


பெண்கள் ப்ரீமியர் லீக்கில் ஷெபாலி வர்மாவின் அவுட் சர்ச்சையானது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக அவர் ஆடினார். ஒரு போட்டியில் அவர் இடுப்புக்கு மேல் வந்த புல்டாஸ் பந்தை அடித்தபோது அவுட்டானார். ஆனால் மூன்றாவது நடுவர் அவுட்டை பரிசீலனை செய்து மீண்டும் அவுட் கொடுத்ததால் சர்ச்சையானது. 


விராட் கோலியின் சதம்


உலக கோப்பையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மோதிய போட்டியில் விராட் கோலி சதமடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டது சர்ச்சையானது. போட்டியை வெல்ல வேண்டும், விரைவாக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என விளையாடாமல் சதமடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விராட் கோலி விளையாடியதாக ரசிகர்கள் விமர்சித்தனர். 


முகமது ரிஸ்வானுக்கு நேர்ந்த அவமானம்


அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியின்போது ரசிகர்கள் சிலர் முகமது ரிஸ்வானை நோக்கி கிண்டல் செய்தது சர்ச்சையானது. பலரும் ரசிகர்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். சென்னையில் ஆடியபோது பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை கொடுத்தனர். 


முகமது ஷமியின் கொண்டாட்டம்


இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் மைதானத்தில் கடவுளை தொழுவது போல் மண்டியிட்டார். இதற்கு ஒரு பிரிவினர் சமி இப்படி சர்வதேச போட்டிகளில் செய்யக்கூடாது என்று விமர்சித்தனர். அதன்பிறகு இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த முகமது ஷமி நான் பிரார்த்தனை செய்யவில்லை, அப்படியே செய்தாலும் என்னை யார் தடுக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.


ரோகித் சர்மா நீக்கம்


மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் ரோகித் சர்மா. அவருக்கு பதிலாக குஜராத் அணியில் இருந்து அழைத்துவரப்பட்ட ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதனை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே விரும்பவில்லை. 


மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா ரெடி...! ஆனால் ரோகித்துக்கும் வாய்ப்பு இருக்கு - பிசிசிஐ பிளான் இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ