Pakistan Cricket: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வீரர்களைத் தேர்ந்தெடுப்பது எந்த் அடிப்படையில் என்பது இன்னும் புரியவில்லை என்று ஆச்சரியப்படுகிறார் பிரபல கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜாவுக்கு உடன்பாடில்லை. தற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கான வர்ணனையாளராக பணிபுரியும் ரமீஸ் ராஜா இது குறித்து கவலை தெரிவிக்கிறார்.


தற்போதைய தேர்வுக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அவர் கடுமையாக சாடினார். இளம் திறமைகளை விட பழைய வீரர்களை தேர்ந்தெடுத்திருக்கும் வாரியம், அணியை காயப்படுத்துகிறது, இது அணிக்கு நல்லதல்ல என்று ரமீஸ் கவலை தெரிவிக்கிறார்.


Also Read | இதுதானா ஐபிஎல் 2021 இன் அட்டவணை, முழு விவரம் இதோ


"பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஸ்லாட்டிங் மற்றும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பது எனக்கு இன்னும் புரியவில்லை. நீங்கள் ஒரு அணியைத் தேர்ந்தெடுப்பதால், நீங்கள் தேர்வு செய்யப்படாத நிறைய வீரர்களை அறிவிக்கிறீர்கள். எப்போதுமே அணியை தேர்ந்தெடுக்கும்போது, எதிர்காலத்தின் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்” என்று ரமீஸ் கூறுகிறார்.


“இளம் வீரர்களை தேர்ந்தெடுக்காமல் தவிர்ப்பது மிகவும் மோசமானது. இது திருமணத்திற்காக தயாராகி மணமேடை வரை வந்த மணமகளை அப்படியே திருப்பி அனுப்புவது போலாகும். பின்னர் நீங்கள் திடீரென பழைய  வீரர்களைத் திரும்பிப் பார்க்கிறீர்கள். அவர்கள் அணிக்கு திரும்ப அழைக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களை அணியில் சேர்த்துக் கொள்கிறீர்கள்" என்று ரமிஸ் தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.


பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் தபீஷ் கானை (Tabish Khan) உதாரணமாக காட்டும் ரமீஸ் கான், அவர் தனது 36 வயதில் அணியில்அறிமுகமானதை சுட்டிக் காட்டுகிறார்.


Also Read | Success Mantra: சச்சின் டெண்டுல்கரின் வெற்றி ரகசியத்தை சொல்லும் சத்குரு; இது சரியா?


"பின்னர், ஸ்லாட்டிங் படி, நீங்கள் டெஸ்ட் அணியில் சல்மான் அலி போன்ற ஒரு வீரரை அறிவிக்கிறீர்கள், ஆனால் அடுத்த முறை அவரை ஒருநாள் போட்டிகளில் விளையாட வைப்பீர்கள். எனவே, முந்தைய தேர்வு சரியாக இல்லை. ஜிம்பாப்வே போன்ற ஒரு அணிக்கு எதிராக 36 அல்லது 38 வயதான (தபீஷ் கான்) அறிமுகமானதைப் போன்றது இது, ஆனால் நீங்கள் 22 வயது இளைஞருக்கு ஒரு வாய்ப்பையும் கொடுக்கவில்லை. இதுபோல உலகில் எங்குமே நடப்பதை நான் பார்த்ததில்லை" என்று ரமீஸ் ராஜா கூறுகிறார்.


"இந்த தளங்களும் மையங்களும் இளம் வயது கிரிக்கெட்டுக்கானவை, அங்கு நீங்கள் எதிர்கால நட்சத்திரங்களை வெளியே கொண்டு வருகிறீர்கள். எதிர்கால நட்சத்திரங்களுக்கு நீங்கள் பெரிய பயிற்சியாளர்களை முதலீடு செய்யும்போது, உங்கள் கிரிக்கெட் மற்றும் உங்கள் அமைப்பு பயனடைகின்றன. அதற்காக முதல் தர மற்றும் டெஸ்ட் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்கலாம். பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவர்களின் GPS முன்னோக்கி நகரும்படி இன்னும் அமைக்கப்படவில்லை" என்று ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.


Also Read | அனுஷ்கா-விராட் கோலி தம்பதிகளின் மகள் Vamikaவின் முதல் புகைப்படம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR