Success Mantra: சச்சின் டெண்டுல்கரின் வெற்றி ரகசியத்தை சொல்லும் சத்குரு; இது சரியா?

என்ன செய்ய விரும்புகிறோம் என்பது கேள்வி அல்ல. செய்வதை எவ்வளவு அர்ப்பணிப்புடன் செய்கிறோம் என்பது தான் வெற்றியின் ரகசியம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 4, 2021, 06:14 PM IST
  • என்ன செய்ய விரும்புகிறோம் என்பது கேள்வி அல்ல
  • செய்வதை எவ்வளவு அர்ப்பணிப்புடன் செய்கிறோம்?
  • இதுதான் வெற்றியின் ரகசியம்
Success Mantra: சச்சின் டெண்டுல்கரின் வெற்றி ரகசியத்தை சொல்லும் சத்குரு; இது சரியா? title=

புதுடெல்லி: கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இந்தியாவின் சிறந்த வீரர்களில் ஒருவர் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதிக ரன் அடித்த வீரர் டெண்டுல்கர் தான், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய அனியின் பேட்டிங்கின் சுமைகளை தனது தோள்களில் தாங்கியவர். 

சச்சின் டெண்டுல்கருக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது வெற்றிகளும் சாதனைகளும் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். சச்சின் எப்படி மலைக்க வைக்கும் சாதனைகளை சாத்தியமாக்கினார் என்பதை தெரிந்துக் கொள்ள அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள். 
பலரும் பலவிதமான கருத்துக்களை சொன்னாலும், சத்குரு ஜக்கி வாசுதேவ் போன்ற முக்கியமான ஒருவர், சச்சின் டெண்டுல்கரின் வெற்றியின் பின்னணியைப் பற்றி சொல்கிறார்.

சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுவது பற்றி சத்குரு என்ன சொன்னார் தெரியுமா? “சச்சின் டெண்டுல்கர்… இந்த மனிதனுக்கு பந்தை அடிப்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவர் ஒரு பந்தை அடிக்கும்போது அவருக்கு அதைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. தனது முழு கவனத்தையும் தவம் செய்வது போல் அந்த பந்தின் மீது வைத்திருக்கிறார். அவர் வேறு யாரையும் போல் பந்தை அடிக்கவில்லை, அப்படி ஒருமுனைப்பாக பந்துகளை அடித்ததால்தான் இப்போது அவர் பாரத் ரத்னா! சச்சின் டெண்டுல்கர் செய்தது உண்மையான பக்தி. சச்சினுடன் தனிப்பட்ட முறையில் பந்தைப் பற்றி பேசினாலும், அவரது பந்தின் மீதான பக்தி தெரியும்”

Also Read | Vegan Diet: வேகன் உணவுமுறைக்காக ட்ரோலாகும் விராட் கோலி, காரணம் என்ன?

 “இது அவருடைய மதம், அது அவருடைய புனிதமான பொருள், அவருக்கு எல்லாமே, பந்தை அடிப்படையாக கொண்டது தான். தனது முழு வாழ்க்கையையும் அவர் ஒரு எளிய செயலில் முதலீடு செய்கிறார், ஒரு பந்தை அடிப்பது, இது ஒரு பெரிய விஷயமா? ஆனால் மிகுந்த பக்தியுடன் ஒரு பந்தை அடித்தால், என்ன நடக்கிறது என்று பாருங்கள். மிகப்பெரிய விஷயங்கள் நடக்கின்றன… எனவே, கேள்வி என்ன செய்ய விரும்புகிறோம் என்பது பற்றியது அல்ல. செய்வதை எவ்வளவு அர்ப்பணிப்புடன் செய்கிறோம் என்பது தான் வெற்றியின் ரகசியம்” என்று சத்குரு வெற்றியின் ரகசியத்தைப் பற்றி கூறியிருந்தார்.

பக்தி முக்கியமானது என்ற உண்மையை வலியுறுத்தும் சத்குரு, யார் என்ன செய்ய விரும்புகிறார் என்பது முக்கியமல்ல, ஆனால் அதைச் சிறப்பாகச் செய்வது தான் முக்கியமானது என்று கூறுகிறார்.

சிம்லாவிற்கும் டெல்லிக்கும் இடையில் ரயில் பயணம் மேற்கொண்டபோது கிரிக்கெட்டர் பீட்டர் ரோபக் (Peter Roebuck) நேரில் கண்ட காட்சியை சத்குரு குறிப்பிடுகிறார். ரயில் பயணத்தின்போது, திடீரென ஒரு ரயில் நிலையத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. காரணம் என்ன தெரியுமா? டெண்டுல்கர் 98 ரன்கள் எடுத்திருந்தார். “எல்லோரும் சச்சின் சதமடிக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்காகத் தான் ரயில் நிறுத்தப்பட்டது. சச்சின் என்ற கிரிக்கெட் மேதை, இந்தியாவில் நேரத்தையும் ஸ்தம்பிக்க செய்வார்! ”

Also Read | கோவிட் நிவாரணப் பொருட்களை தமிழக அரசுக்கு வழங்கிய Isha Foundation

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News