19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கயானாவில் தொடங்கியுள்ளது. இதில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதனை 45 ஓவரில் சேஸ் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | INDvsSA: இந்திய அணிக்கு தொடரும் வரலாற்று சோகம்..!


இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பிளேயிங் 11-ல் விளையாடிய நிவேதன் ராதாகிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவருடைய அப்பா அன்புச் செல்வன் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதால், நிவேதன் ராதாகிருஷ்ணனுக்கு சிறப்பாக பயிற்சியைக் கொடுத்துள்ளார். இதனால், வலது மற்றும் இடது என இரு கைகளிலும் பந்து வீசக்கூடிய நிவேதன், பேட்டிங்கிலும் அசத்துகிறார். இவரின் திறமையை அறிந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், டெல்லி அணிக்காக வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக நிவேதன் ராதாகிருஷணனை பயன்படுத்திக் கொண்டார். 


ALSO READ | DRS: 3வது நடுவரால் கொந்தளித்த இந்திய வீரர்கள்.! விராட் செய்தது சரியா? Video


இப்போது, ஆஸ்திரேலியாவின் தேசிய கிரிக்கெட் அணியிலேயே இடம்பிடிதுள்ள அவர், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 10 ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளை எடுத்த அவர், பேட்டிங்கிலும் 31 ரன்கள் எடுத்து முத்திரை பதித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு நிவேதன் ராதாகிருஷ்ணனின் ஆட்டம் பெரும்பங்கு வகித்தது. அவருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR