புதுடெல்லி: 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. டீம் இந்தியா 130 கோடி மக்களின் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புகளுடனும் மைதானத்திற்குச் செல்ல இருக்கிறது. அதே நேரத்தில் நியூசிலாந்து முந்தைய உலகக் கோப்பையில் செய்ததை போல மீண்டும் செய்ய விரும்புகிறது. ஆமா கடைசி உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - நியூசிலாந்து மோதும் போட்டிக்காக வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். ஹார்டிக் பாண்ட்யா கூட தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிக்காக மிகவும் ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். 


இப்போது இந்த நேரத்தில், இந்த போட்டியை சீர்குலைக்க முடியும் என்றால், அது மழையால் மட்டுமே முடியும். ஆம், இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் போட்டியில் 50 சதவீதம் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இன்று மழை காரணமாக போட்டி நடைபெற வில்லை என்றால், நாளை (புதன்கிழமை) நடைபெறும். ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளையும் காரணமாக போட்டி நடைபெற வில்லை என்றால், என்ன நடக்கும்?


அந்த நேரத்தில் லீக் சுற்றில் இரு அணிகளின் செயல்திறனை அடிப்படையில்( புள்ளி பட்டியல்) இறுதிச்சுற்றுக்கு செல்லும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவரை, இந்தியா 8 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மறுபுறம், நியூசிலாந்து 11 புள்ளிகளை பெற்றுள்ளது. மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. நியூசிலாந்து மட்டும் வெளியேற வேண்டிய சூழல் நேரிடும். மழை காரணமாக போட்டி நிறுத்தப்படும் என்றால், பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா எளிதாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.