கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம், குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் ‘பத்ம’ விருதுகளை மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில் இன்று டெல்லி ராஸ்ட்ரபதி பவனில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் விளையாட்டுத் துறையின் பிரிவில் தோனிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் பத்ம பூஷண் விருது பெரும் 11-வது விளையாட்டு விரர் என்ற பெருமையினை அவர் பெற்றார்.


இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், சாந்து பார்டே, தின்கர் பால்வன்ட் தியோதர், கோட்டாரி நாயுடு மற்றும் லாலா அமர்நாத் முதலியானோர் பெற்றுள்ளனர்.


மகேந்திர சிங் தோனி இதற்கு முன்னதாக அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் பத்மஸ்ரீ விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!