காதலியை கரம்பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சேம்சன்: SeePic

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சஞ்சு சேம்சன், தனது நீண்ட நாள் காதலியான சாரு நாயரை இன்று திருமணம் செய்து கொண்டார்!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சஞ்சு சேம்சன், தனது நீண்ட நாள் காதலியான சாரு நாயரை இன்று திருமணம் செய்து கொண்டார்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 19 வயதில் அறிமுகமான சேம்சன் தனது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்தார். IPL-லில் அரைசதம் அடிக்கும் மிக இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். தனது 21வது வயதில், இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நீண்ட நாள் காதலியான சாரு நாயரை, சேம்சன் இன்று திருமணம் செய்து கொண்டார். கல்லூரியில் இளங்கலை பயிலும் போது, இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்து மதத்தை சேர்ந்த சாருவும், கிறிஸ்தவரான சேம்சனும், சிறப்பு திருமண சட்டத்தின் படி இன்று மணம் முடித்தனர். திருவனந்தபுரத்தின் கோவளம் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இரண்டு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களது திருமணம் நடைபெற்றது. எளிய முறையில் நடைபெற்ற திருமணத்தில், இரண்டு குடும்பத்தை சேர்ந்த 30 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக சேம்சன் தெரிவித்தார். இந்த இன்று மாலை, வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.