கடந்த சீசன், பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் போது, எவர்டன் நகரில் ரசிகர் கையில் இருந்த செல்போனை வேண்டுமென்ற தட்டிவிட்டதற்காக 50 ஆயிரம் பவுண்ட் (ரூ. 49. 4 லட்சம்) அபராதமும், கிளப் ஆட்டங்களில் 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து இங்கிலாந்து கால்பந்து வாரியம் அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ விலகியுள்ள நிலையில், அவர் எந்த நாட்டின் புதிய கிளப் அணியில் சேர்ந்தாலும் இரு போட்டிகளில் விளையாட தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடை பிபா உலகக்கோப்பையில் செல்லாது. https://zeenews.india.com/tamil/topics/Ronaldo


இதுகுறித்து இங்கிலாந்து கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஒரு சுயாதீன ஒழுங்குமுறை ஆணையம் அவரது நடத்தை முறையற்றது மற்றும் வன்முறையானது என அடுத்தடுத்த விசாரணையின் போது கண்டறிந்து, இந்தத் தடைகளை விதித்தது" என குறிப்பிட்டுள்ளது. 


மேலும் படிக்க | போர்ச்சுகல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கம்!



தவறை ஒப்புக்கொண்ட ரொனால்டோ, தனது சுய பாதுகாப்புக்காவே அதை செய்ததாக விளக்கமளித்துள்ளார். இருப்பினும், அவரின் செயல் பயம் அல்லது சுய பாதுகாப்பு போன்றில்லாமல், எரிச்சல் மற்றும் விரக்தியில் செய்தது போன்று உள்ளது என ஆணையம் கூறியுள்ளது. 


முன்னதாக, இந்த செயலுக்கு தனது இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ மன்னிப்பு கேட்டு பதிவிட்டிருந்தார். அதில்,"நாம் எதிர்கொள்ளும் கடினமான தருணங்களில் உணர்ச்சிகளைக் கையாள்வது எளிதல்ல. இருப்பினும், நாம் எப்போதும் மரியாதையுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும் மற்றும் விளையாட்டை விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். எனது கோபத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என குறிப்பிட்டிருந்தார். 


தற்போது, பிபா உலகக்கோப்பை தொடர் கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில், ஹெச் பிரிவில் இடம்பெற்றுள்ள  ரொனால்டோ தலைமையிலா போர்ச்சுகல் அணி, இன்று கானா அணியுடன் மோதுகிறது. இப்போட்டி, இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஜியோ சினிமா ஆஃப்பில் நீங்கள் இப்போட்டியை இலவசமாக காணலாம். 


மேலும் படிக்க | அவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கல? இந்திய அணியை சரமாரியாக விளாசிய முன்னாள் வீரர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ